பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

வேதம் மன்னும்மார் கழி'ஆதி ஐந்தினில் புள் ஆதி

வாய்ந்த எல் ஒருபத்தி னில் மற்றநாயகன் ஆம்பரத்தினில் காலத்தை

வாள்ைமக ளிரைஏத்தி யே இன்ன செய்! செய்யற்க! என்கை வாழ்வு எய்தமேல்

எழிலிமழை பெய்துதடை தான்் யாதும்இன்று ஆம்என்கை பெண்கள்ஈரைவரை

எழுப்புதல் அவற்றினோ டும் பின்னையை எழுப்பு:உந்து முதல்மூன்றின் முந்துறப்

பெலபத்ரன் நிறைதந்தை தாய் பெருவாயில் கோயில்காவலர் ஏற்ற அங்கணில்’ பெரும! எழு கென்றுமா ரி -- - சென்னது அன்று'ஆதிரழ் ஆதிசங்கு ஆதிபறை

தொண்டுஉரை திருப்பாவை யைச் சொல்லுவார் முத்திஎய்து வார்என்ற கோதையைச்

சுருதி.என்றும்காக்க வே. (25)

இப் பாடல் திருப்பாவையின் பொருள் வைப்பு முறை கூறுகின்றது. நிலைபெற்ற 'மார்கழி எனத் தொடங்கும் பாடல் ஐந்திலும் புள்' எனத் தொடங்கும் பாடல் முதல் பதினைந்தாம் பாடல் வரையும் நாயகன் 'அம்புரம்' எனத் தொடங்கும் பாடல்கள் வரை ஏந்தியே நோன்புக் காலத்தில் இன்னது செய்க! இன்னது செய்யற்க! என்று கூறுவதாம். -

வாழ்வு பெற, மேல் முகில் மழைபெய்து நோன்புக்குத் தடை ஏதும் இன்று என்பதாம். பத்துமகளிரை எழுப்புவது. அவற்றுடன் பின்னைப் பிராட்டியை எழுப்புதல். 'உந்து முதல் மூன்று பாசுரங்களில், முதலில் பலராமனையும் நந்தகோபன் யசோதை ஆகிய பெற்றோரையும் வாயில், கோயில் காவலரையும் எழுப்பி ஏற்ற அங்கண் எனத் தொடங்கும் பாடல்களில் கண்ணனை எழுப்பி மாரி எனத் தொடங்கும் பாடல் கூறப்பட்டது. அன்று எனத் தொடங்கும் பாடல் முதல், ஏழு பாடல்கள், சங்கு முதலிய பறையாகிய தொண்டு முதலியவற்றைக் கேட்பதாம். கடை சிப்பாடல், திருப்பாவை சொல்லுவார் முத்தி எய்துவார் என்றாள் கோதை, அந்தக் கோதையை வேதங்கள் எப்போதும் காப்பாற்றுக்.