பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

2. செங்கீரைப் பருவம்

வரிஉழு வையின்அதன் உடையினன் விடையினன்

மாதுமை பங்காளன் மதிநதி இதழியொ டறுகடை சடைமிசை வாழ்வுறு கங்காளன்

எளிவிழி நுதலினன் இரவினை ஒழிகென

சனம்,அடைந்தோதும் இரவினை ஒருநொடி

யினுள்ஒழி கருணையன் யாவரும் அன்பாகக்

கரிசொல உதவிய தனிமுதல்; உலகுயிர் காவலன் இன்பான கடவுளர் அதிபதி

எனமண தினில்உறு காதல்அடங்காமல்

அளிஅளி எனும்உரையினர்மகிழ் தரஇனி தாடுக செங்கீரை அளிசெறி மதுமகிழ்

அணிபவர் திருமகள் ஆடுக செங்கீரை!

(25)

உடலில் வரிகளை உடைய புலித்தோல் ஆடையன், காளை வாகனன், உமையை இடப்புறம் வைத்தவன், இளம்பிறையும் கங்கையும் கொன்றையும் அறுகும் அடைந்த சடைமேல் வாழப்பெற்ற தலையினன். நெருப்புக் கண் கொண்ட நெற்றியினன். இத்தகைய சிவன் திருமாலிடம் வந்து, "என் பிச்சாண்டி நிலைபோக்கி, என் கையில் ஒட்டிக்கொண்ட பிரமன் தலையை நீக்கி அருள்க!” என்று இழிவு அடைந்து வேண்டினான். ஒரு நொடியில் அவன் வேண்டியபடியே அவன் இரக்கும் தொழிலையும் தலைஓட்டையும் ஒழித்த அருளினான். எல்லோரும் அன்பு கொள்ளும்படி யானை ஆதிமூலமே என்று சொல்லும்போது அதற்கு உதவிய தனி முதல்வன்; உலகுக்கும் உயிர்கட்கும் காவலன் வழிபட்டு இன்பம் கொண்ட நித்தியதுரிகட்குத் தலைவன் என்று பலவாறு நினைத்து, மிக்க காதல் மனத்துள் அடங்காமல், அரி அரி" என்னும் சொல்லுபவர்கள் மகிழ்வடையும்படி இனிதாகத் திருமகளே இருகை ஊன்றி ஒருகால் மடக்கி ஒரு கால் நீட்டித் தலை நிமிர்ந்து செங்கீரை ஆடுக!

வயலிடை உழவர்கள் மழவிடை யொடுபடை

வாயின்உழும்சாலில்

வரிவளை இளையரின் அரவமொ டுடன் எழ

வாளைவெருண்டோடிப்