பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 * ஆண்டாள் பிள்ளைத்தமிழ்

புயல்படி பொழிலிடை கயலுடன் உகளுடி

விரி தண்தேறல்

பொறிஅளி சினைதொறும் இழைநற வுடன்இழி பூசலு டன்கூடி -

இயல்இசை நடம்நவில் ஒலிசது மறைஒலி

ஏழுடன் ஒன்றாகும்

எழில்மலி புதுவையுள் உலகுயிர் தழைதர

வேவரு நங்காய்! இங்கு

அயன்முத லியஇமையவர்மகிழ் தரஇனி

தாடுக செங்கீரை!

அளிசெறி மதுமகிழ் அணிபவர் திருமகள்

ஆடுக செங்கிரை! (27)

வயலிலே உழவர் இளவேறு பூட்டிய கலப்பை துனியால் உழுகின்ற சாலில், நீண்ட சங்குகள் கடைசியரின் ஒலியுடன் ஒலியெழுப்பிக் கலப்பையினுடன் தாமும் உமும்.

அப்போது அங்கே இருந்த வாளைமீன்கள் அஞ்சி வெருண்டு ஒடி, மேகம் படித்த சோலையில் கயல்மீன்களுடன் கூடிக் குதிக்கும். பூக்கள் மலர்ந்து சொரிந்த தண்ணிய தேனானது, உடலில் புள்ளிகளையுடைய வண்டுகள் மரக்கிளை தோறும் கட்டிய கூட்டிலிருந்து வழிகின்ற தேனுடன் சேர்ந்து கீழே ஒழுகும்.

அப்போது ஒருவகை இன்னோசை எழும். அந்த ஒசையானது இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் நவிற்றும் ஒலியும், தான்்மறை ஒதும் ஒலியும் எழுப்பும் ஏழு சுரங்களுடன் ஒன்றாகக் கலந்து ஒலிக்கும்.

அத்தகைய அழகு மலிந்த புதுவையில் உலகும் உயிரும் தழைக்கும்படி வருகின்ற தங்கையே! இங்கே பிரமன் முதலிய இமையவர்கள் உன் அழகு காணத் திரண்டு வந்துள்ளனர். அவர்கள் கண்டு களிக்கும்படி நீ செங்கீரை ஆடியருள்:

வண்டுகள் செறிந்த தேன். பொருத்திய வகுளமாலை அணிந்த சடகோபன் திருமகளே! நீ மழலைச் சொல்லாடியருள்!