பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. பொழிப்புரை - த. கோவேந்தன் * 75

சூடிப் புரிகுழல் கோடித் திடுதொடை

சொல்தமிழ் மாலிகைநல்

சுடர்விடு பஃறலை அரவணை இணைவிழி துயில்பயில் புகழ்ஆயர் *

பாடிச் செல்வர் புனைந்திட அருள்மலி

பட்டர் பிரான்மகளாய்ப்

பஞ்சுரம் இந்தளம் பிலகரி பயிரவி

பந்துவ ராளிதினம்

கூடிக் கூடிப் பெடையொடும் ஆயிர

கோடி கரும்புஉளரும்

குவளைத் தடமொரு செண்பக மணமலி

கொத்தார் புத்துாருள்

ஆடிப் பூரத் தினில்வரு திருவே!.

ஆடுக செங்கீரை! அழகனும் அப்பனும் அன்பற இன்புடன்

ஆடுக செங்கீரை! (28) சுருண்ட கூந்தலில் சூடி ஒப்பனை செய்த மலர் மாலையும் சொல்லியருளிய தமிழ் மாலையும், சுடர் விரிகின்ற பலதலைகளைக் கொண்ட ஆதிசேடனாகிய அரவணையில், இருவிழிகளும் மூடி அறிதுயில் கொண்ட புகழையுடைய ஆயர்பாடிச் செல்வராகிய திருமால் அணிந்து கொள்வதற்காக -

அருள் நிரம்பிய பெரியாழ்வார் மகளாகப் பஞ்சுரம், இந்தளம் பிலகரி பயிரவி, பந்துவராளி என்ற பண்) இராகங்களை நாடோறும் கூடிக் கூடித் தம் பெடைகளுடன் பாடி அளவில்லாத வண்டுகள் சுழலுகின்ற குவளைமலர்த் தடாகங்களுடன் நறுமண மிக்க செண்பகக் கொத்துகள் நிரம்பிய வில்லிபுத்துாருள், ஆடிமாதம் பூர நாளிலே தோன்றிய திருமகளே! ஆடுக செங்கீரை!

சோலைமலை அழகனும் திருவேங்கடமலைத் தலைவனும் அன்புகூர இன்பத்துடன் ஆடுக செங்கீரை!

வாழ்வார் இழிகுலம் ஆயினும் அழகுறு வடிவில ராம் எனினும் -

மதிஒரு சற்றுஇலர் ஆயினும் வண்மையை

மனதில் உறார் எனினும்