பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிப்புரை - த கோவேந்தன் * 77

பெருமுகத்து எழினித்து ஆல்ஆ சானுடன்

போந்ததோ சியமக னொடும் பொன்விளக்கு எழமுழவு இரட்டநாடகவனிதை

பூபதிமுன் ஆடல்ஏய்க் கும்

திருமுகத் துறைஅரங் கத்து அமுதின் அமுதமே!

செங்கீரை ஆடியரு ளே! செஞ்சொல் திருப்பாவை பாடித் தரும்பாவை!

செங்கீரை ஆடியரு ளே!

İğ)

கரிய முகிற்கூட்டம் புகுந்து முழங்குகின்ற சோலைகள் நாட்டிய அரங்கம். நாட்டிய அரங்கின் இருபுறமும் வாழைமரம் காட்டுவர். அதைப்போல் இயல்பாகவே இருபுறமும் வாழைமரங்கள் வளர்த்திருக்கும்.

அரங்கிற்குப் பின்புறமும் இருபுறமும் மறைப்பு வேண்டு மல்லவா? ஒளிவிரித்து எழுகின்ற பவளக் கொடிகள் படர்ந்து எதிர்எதிராகக் கலந்து பின்னிய கற்றைகள் மறைப்பாகத் தாழ்ந்து, இருபக்கமும் உள்ள இடைவெளியை அடைத்திருக்கும். அந்தப் பவளக்கொடிகளின் அடைப்பைத் தள்ளி ஈர்த்துக் கொண்டு ஒர் அழகிய மயில் பின்புறமாக இருந்து அகவும். அப்போது வெண்ணிலவு தோன்றும்.

மற்றொரு மயில் வந்து அரங்கின் முன் வந்து நடனமாடும். சங்குகள் ஒலியெழுப்பும். முன்னே இருந்து ஒர் அன்னம் கண்டு களிக்கும் இக் காட்சி. கரிய மேகக் கூட்டத்தின் ஒலி முரசொலி. சோலைகள் நடன அரங்கம் கட்டிய வாழைமரம், இயற்கையாகத் தோன்றிய வாழைமரங்கள், ஒளி விரித்து வளரும் பவளக் கொடி கள் அரங்கின் முப்புறமும் அமைத்த மறைப்புகள். பின்புறம் அகவும் மயில், தோரிய மடத்தையாகிய ஆடி முதிர்ந்த துணை) நடனமங்கை. முரலும் சங்கு, ஆடல் கற்பித்த ஆசான், நிலவொளியானது மேடைக்கு ஏற்றிய விளக்கு முன் இருத்து கானும் அன்னம் அரசன். இத்தகைய காவிரித் துறைகளையுடைய அரங்கத்துக் குடிகொண்ட அமுதுக்கு அமுதே' செங்கீரை ஆடியருள்:

செவ்விய சொற்களால் அமைத்த திருப்பாவை பாடித் தந்த பாவையே! செங்கீரை ஆடியருள்!