பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தமிழ் காக்கும் அண்ணலுக்கு .

என்னை ஒரு பொருட்டாய் ஏற்று, என் உயிர் காத்து முன்னைத் தமிழுக்கு முற்றுமாய் - அன்னையாய் அத்தனாய் அந்தமிழ் காக்கும் செகத்தண்ணல் பித்தனாய் ஏற்றான் பெரிது !

விழுமிய பண்பாளன், வைணவம் வாழச்

செழுமிய செல்வத்தைச் செம்மை - கொழுமிய

பேரறிவைப் பெற்ற மரபுரிமைப் பேற்றையெலாம்

சீரறிவாய்ச் செய்தான்் தெரிந்து!

ஆழ்வார்கள் மையம் அமைத்தான்், இவ் வையத்து வாழ்வார்கள் வைணவ நூல் அத்தனையும் சூழ்ந்தாரப் பெற்றுக் களித்திடவே பீடார் நயவுரைகள் முற்றும் அளித்தான்் முனைந்து

அசைவிலா ஊக்கத்தால் ஆக்கத்தை நல்ல வசையிலாக் கல்விக்கே வாரி - இசையெலாம் கொடை மன்னர் கோடி கொளாததெலாம் கொண்டான்

அடை மழைபோல் பார்க்கும் அளித்து !

சங்கத்துச் சான்றோர்கள் இன்றிருந்தால் சாமிக்கண் சங்கம் சகத்ரட்ச கன்இல்முன் - பொங்கித் திருக்கோயில் இஃதென்று செந்தமிழ் பாடித் தருக்கோடிருப்பர் தளிர்த்து !

சூடிக் கொடுத்த சுடர்க்கொடிப் பாட்டமுதில் ஆடிக் களிக்கின்ற அண்ணலுக்குத் தேடி நான் ஆண்டாள் பிள்ளைத் தமிழ் ஆழ்க எனத்தந்தேன் மாண்டானை மீட்டதவன் மாண்பு !

-த. கோவேந்தன்