பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 ல் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்

துளவத் தாயின் மகளே செங்கீரை ஆடியருள்! செஞ்சொல் திருப்பாவை பாடித் தரும் பாவையே, செங்கீரை ஆடியருள்!

நிறைகொண்ட மனதில்உறு பொறைகொண்ட பூதங்கள்

நிலைகொண்ட புலன்ஜந்தின் வாழ்

நெறிகொண்ட புலன்ஐந்து குறிகொண்டு அடக்குவதை

நியமம் அது கொண்டு அடக்கும்

முறைகொண்ட தொண்டர்தம் திறைகொண்ட

கொண்டல், குறு முயல்கொண்ட மதியினைத் தன்

முடிகொண்ட சோலைமலை குடிகொண்ட இடம்கொண்ட முதல்வன், திடம்கொண்ட நான்

மறைகொண்ட சிறைகொண்டு உரம்கொண்ட புள்அரசன்

மதிகொண்டு துதிகொண்ட தால்

வாகனம் கொண்டமால் மோகனம் கொண்டருள்

வளம்கொண்டு குழையும்மதி யைத்

திறைகொண்ட வாள்நுதல் பிறைகொண்ட பெண்ணரசி! செங்கீரை ஆடியரு ளே! செஞ்சொல் திருப்பாவை பாடித் தரும்பாவை!

馨 g I செங்கீரை ஆடியரு ளே! (33) அறிவுடைமை மனத்தில் மிக்க வலிமை கொண்ட ஐம்பூதங்களும் நிலையாகக் கொண்ட ஐம்பொறிகளில் வாழ்வன ஜம்புலன்கள். நன்னெறியில் செல்லும் ஐம்புலன்களையும் ஒழுக்கத்தால் (தீய வழியில் செல்லாமல்) அடக்குவதை முறைமையாகக் கொண்டு அடக்குகின்ற இயல்பு கொண்டவர்கள் பாகவதர்கள். அவர்களின் காணிக்கை ஏற்றுக்கொள்ளும் நீலமுகில் மேனியன் திருமால்.

குறிய முயல்கறை கொண்ட நிலவினைத் தன் தலையில் ஏந்தியுள்ளது சோலைமலை, அம் மலையில் குடிகொண்டு அதனைத் தனக்குரிய இருப்பிடமாகக் கொண்ட முதல்வன் அவன்.

வலிமை கொண்ட நான்மறைகளாகிய சிறகுகள் கொண்டு அதனால் திடம் கொண்டவன் கருடன். அக் கருடன் அறிவுகொண்டு போற்றுவதை மேற்கொண்டமையால், அவனை ஊர்தியாகக் கொண்ட