பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிப்புரை - த கோவேந்தன் * 81

அத் திருமாலிட்ம் காதல்மயக்கம் கொண்டும் அருளின் வளத்தைக் கொண்டும் வளைந்த இளம்பிறையை வென்று கப்பம் பெற்ற ஒளிநுதலாகிய பிறையைக் கொண்ட பெண் அரசியே! செங்கீரை ஆடியருள்! -

செஞ்சொல் திருப்பாவை பாடித் தரும் பாவையே ! இருகை ஊன்றி, ஒருகால் மடக்கி ஒருகால் நீட்டித் தலை நிமிர்ந்து செங்கீரை ஆடியருள்!

போர்ஆடு சமர்முனையின் நேர்ஆடு வார், நிறப்

புண்நீருள் ஆட, முனை யின் புறம்ஆடு வார்உள்ளம் ஊகல்ஆ டவும், உடல்

புள்ஆடல் காணாத வெம் குர்ஆடல் வென்றஅப் பேராடல் வேலினைத்

துறைஆடு கெண்டைஇணை யைத் துணைஆடும் அஞ்சனச் சேறுஆடு கண்ணினார்

துணைவரொடும் விளையாடும் மெய் வேர்ஆடல் ஒழிய, நல் நீராடி ஏக அவர்

மென்னடையும் நின்னடையுமே வேறுஅல்ல வாம்ான்று சேவல்ஊ டியபெடையின்

மெல்அடியின் வீழ்ந்துஉணர்த் திச் சீராடு திருமுக்கு ளப்புதுவை அபிராமை!

செங்கீரை ஆடியரு ளே! செஞ்சொல் திருப்பாவை பாடித் தரும்பாவை

செங்கீரை ஆடியரு ளே!. (34)

போர்க் களத்தில், பகைவரொடு நேருக்கு நேர் பொருபவர் தங்கள் மார்பில் ஒழுகும் குருதியில் குளிப்பர். புறத்தில் நிற்போர் போரிடும் வீரர்களின் வலிமை கண்டு கூத்தாடுவர். இவர்களே வெல்வார். இல்லை; இல்லை. அவர்களே வெல்வார் என்று போர்க்காட்சி காண்பவர் உள்ளம் ஊசலாடும்.

மாண்டவர் உடலில் காகம், கழுகுகள் ஊன் உண்டு ஆடாதது கண்ட பேய்கள், அந்த உடலினின்று உயிர்போகவில்லையோ? என்று ஆடிக்கொண்டு சுற்றிவரும், வீழ்ந்து கிடப்பவர் மேல் அப் பேய்கள் தாக்காதபடி வெற்றி வேலினைச் சுழற்றுவர் வீரர். சுழலும் வேல்களையும், நீர்த்துறைகளில் விளையாடும் கெண்டை களையும் ஒக்கின்ற அஞ்சனம் (மையில்)ஆடிய கண்ணையுடைய மகளிர், தம் காதலரொடு கலவி விளையாடியதால் அவர்கள் உடலில் வேர்வை ஒழுகும். அக் காட்சி வேர்வையில் குளிப்பது போல் தோன்றும்.