பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிப்புரை த. கோவேந்தன் 大 83

உலகப் பற்றுத் தழைப்பதால் நல்வினை தீவினைகள் பெருகி அவற்றால் பிறவித் தளையில் கட்டுண்டனர் அறிவிலிகள். அவர்களுக்குப் பண்டே உரிமையாகிய பேரின்டம் தழைத்த வீடு பெறுவதற்காக, நம்மாழ்வார் தோற்றம் செய்தார்.

மணம் பெருகி மகரந்தம் நிரம்பித் தேன் ஒழுகுகின்ற மொட்டு மலர்கின்ற பருவம் அடைந்து, வாட்டமுறுந்தோறும் நறுமணமும் ஒளியும் பொங்குகின்ற வகுள மலர் மாலையைப் புனைகின்ற மார்பினர் அவர். அவருக்கு அன்பு நிரம்பிய திருமகள் ஆயினாய்! கற்பு நிலையில் உயர்ந்தாய்! அருள் செழித்தாய்! பெருமைக்குரிய பண்பின் நிறையிலும் சிறந்தாய்! மிகச் சிறந்த அடக்கமும் நிரம்பினாய்! தலைமை சான்ற ஒழுக்கமும் கொண்டாய்!

கடல் சூழ்ந்த உலகம் வாழத் தழைக்கின்ற தமிழ்ப் புதுவை ஆண்டாளே! செங்கீரை ஆடியருள்! செஞ்சொல் திருப்பாவை பாடித்தரும் பாவையே! செங்கீரை ஆடியருள்!

பெருமகள் எனத்தவள மலர் மாளி கைக்குஉரிமை

பெற்றகலை மகள், இமய மாம்

பேர்கொண்ட கோதண்ட வேதண்டம் இன்புறப்

பெற்றமலை மகள், துடக் கிப்

பொருமகள் எனத்தகும் சிலைமகள் இசைத்திறம் புகலும்நிலை மகள்நால் வரும் .

புகழவரு தலைமகள் எனத்தழைத் தேபுனிதர்

போற்றுதிரு வாழ்மார்பருக்கு

ஒருமகள் எனத்தவம் பெரிதுஉடைய நங்கைதிரு

உதரத்தி னுள்குடி புகுந்து

உலகில் வந்து உபநிடதம் ஒதாது உணர்ந்துதமிழ்

உரைசெய்த குருகைமாறன்

திருமகள் எனத்தமிழ் புதுவைவரு பெண் அரசி!

செங்கீரை ஆடியரு ளே! செஞ்சொல் திருப்பாவை பாடித் தரும் பாவை!

செங்கீை யாக ளே! - . 豫 ர ஆடியரு (38) '

பெருமைக்கு உரியவள் என்னும்படி மலராகிய மாளிகைக்கு உரிமை ப்ெற்றவள் கலைமகள். இமயமாம் பேர்கொண்டு சிவனுக்கு