பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒa * ஆண்டாள் பிள்ளைத்தமிழ்

வில்லியாகிய மலையரசன் இன்புறும்படி அவனுக்கு மகளாகிய மலைமகள். போர்த் தெய்வம் எனத் தகுதி பெற்ற சிலைமகள் (துர்க்கை இசைத்திறம் கூறுகின்ற இசை மகளாகிய நிலைமகள் ஆகிய இந்த தால்வரும் புகழும்படி திருவிறக்கம் (அவதாரம்) செய்த தலைமகள் எனத் தழைத்தாய்!

திருவண் பரிசாரத் திருப்பதியில் வாழ்ந்த துரயோர் போற்றும் திருவாழ் மார்பர் என்பவருக்கு ஒரே மகள் என்னும்படி தவம் பெரிதும் உடைய தங்கை நாச்சியானின் வயிற்றினுட் புகுத்து தாயைத் குடல் விளக்கம் செய்ய உலகில் வந்தவர் நம்மாழ்வார்.

அவர் ஒதாது எல்லாம் உணர்த்த அறிவின் கொடுமுடி! தமிழ் மறை சொன்ன குருகை மாதர். அவருக்குத் திருமகள் எனத் தமிழ்ப்புதுவை வரும் பெண் அரசியே! இருகை ஊன்றி, ஒருகால் மடக்கி, ஒருகால் நீட்டித் தலை நிமிர்த்து ஆடுக செங்கீரை: செஞ்சொலால் திருப்பாவை பாடித் தரும் பாவையே: திருமொழி தந்தவளே! செங்கீரை ஆடியருளே !