பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 ல் பொழிப்புரை - த கோவேந்தன்

புற்றிலே ஆடுகின்ற பாம்பைப் போல் உடலில் பிணித்து முழங் கிப் பொருதுகின்ற சானூரன், முட்டிகள் ஆகிய இரு மல்லர்களைக்த கொன்றான். அழியாத பகை புரிந்த மாமன் ஆகிய கஞ்சன் பொன் மகு டத்தை உதைத்த டொன்னடிகளை உடையவன்.

கன்றுகளோடு கூடிய பகக்கூட்டம் மேய்த்த சிற்றாயன், அவனைக் காதலித்தருளும் சிற்றிடைப் பெண் அமுதே தாவோ தாலேலோ! சிறகு களையுடைய வண்டு ஒலிக்கின்ற பூந்துளவு பெற்ற தேனே'தாலோ தாலேலோ! -

செந்தா மரை டையுள் நின்று அயலே

திடர்கூர் புளினத்தாய்த்

திவள்யைங் கமுகில் படரும் பவளச்

செக்கர்க் கொடிதான்் அக்

கொந்துஆர் கமுகு,உம் பரின் நின்று இம்பர்க்

கொழுகொம் பெனவீழக் கொடியில் பிறைக்கோடு உழநெக்கு அமுதம்

குதிகொண்டு எழுசால்பால்

மந்தா கினிவீழ் சடையான் இமவான்

மகளோடு உடல் ஒன்றாம்

வகைபெற்று உறையும் கயிலைக் கிரியான்

மண்ணோர் விண்ணோர் எண்

சந்தா டவிசூழ் புதுவைப் பதியாய்!

தாலோ தாலேலோ! சரதத் திருவே பரதத் துவமே!

தாலோ தாலேலோ!

(39)

ஒரு செந்தாமரைக் குளம். அதனருகே மேடுபட்ட மணற்குன்று, அக் குன்றினிடத்து நெருங்கி வளர்ந்துள்ளது ஒரு கமுகு மரம் அம் மர

த்தின் மேல் படர்ந்துள்ளது சிவந்த பவளக்கொடி, கொத்தாக்க் காய்த்த

அந்த கமுகின் உச்சியினின்றும் கீழே அம் மரத்துக்குக் கொழுகொம்பு போல வீழ்ந்து நிலத்தை, தொட்டுக் கொண்டுள்ளது.