பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாள் பிள்ளைத்தமிழ் * 88

அந்தக் கொடியின் வானத்துப் பிறையின் துனி குத்துகின்றது. அப் போது அந்தப் பிறை நெகிழ்ந்து அதிலிருந்து அமுதம் குதித்துக் கொண்டு ஒழுகுகின்றது. அவ்வாறு அமுதம் ஒழுகுகின்றமையால், கங்கை விரும்பும் சடையுடைய சிவன் கமுகமரமாகவும், இமவான் மகளாகிய உமை பவளக் கொடியாகவும், இருவரும் ஒருடலாய் உள்ள காட்சிதோன்றும். இக் கயிலை மலைச் சிவனும் மண்ணுல கத்தவரும் விண்ணுலகத்துவரும் எண்ணி வணங்குகின்ற சந்தனக்காடு சூழ்ந்தது புதுவை, அப் பகுதியில் பிறந்தவளே! தாலோ தாலேலோ!

உரமே வியஎண் பொடுதோல் போர் ஊன்

உடலைத் திடம் என்றே உண்டி படைத்திப் பண்டிக்கு இரைஇட்டு

உறுதி உறா மாயா

புரமா னதனுள் குடிபுக் கவரைப்

புறம்விட்டு உறுதி உறும்

பூதல மாதவர் தமைவழி பட்டுப்

பொருள்உரை கற்றவராய்த்

திரம்ஆ கியபே ரின்பமது எய்தச் செந்தமிழ் தேர்புதுவைத்

திருமா நகருள் குடிகொண்டு உறைநின்

திருவடி களில் என்றும்

சரணா கதியென்று அடைவார் அமுதே'

தாலோ தாலேலோ

சரதத் திருவே! பரதத் தவமே!

தாலோ தாலேலோ! (40)

வலிமை வாய்ந்த எலும்பொடு தோல் போர்த்த ஊன் உடலை உறுதிவாய்ந்தது என்று கருதி உண்டிசமைத்து வயிற்றுக்கு இரையிடுவர். இவ்வாறு உறுதி உறாத மாயாபுரம் என்னும் பொய்யுலகினுள் குடிபுகுந் தவரை உறவு கொள்ளாமல் அப்புறம் தள்ளிவிட்டு, மனஉறுதி உற்ற நானி லத்திலுள்ள பெருந் தவத்தவரை வழிபட்டு, அவர் வாய்மொழியும் மந்தி ரத்திரயம் என்னும் பொருள் பொதிந்த மந்திரத்தின் உட்பொருளையும் கற்று, அதற்குத் தக நின்று, உறுதி ஆகிய பேரின்ப வீடு அடைவதற்காகச் செந்தமிழ் தேர் புதுவைத் திருமா நகருள்ளே குடிகொண்டு வாழும்