பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூற் பயன்

அடித்தாம ரைப்போதி னில்பெற்ற பாகீ

ரதிப்புனலை அண்டர்அண் டத்து

அப்புறத்து அயனைமுதல் இப்புறத்து அனைவர்க்கும்

அமுதென்ன அருளிஅர னார்

முடித்தாமம் ஆம்எனப் புனையஅன்று அருளும்முழு

முதல்அரங் கேசன்முத லாம்

முதல்வர்ஜ வரும்மகிழ வேதிருப் பாவைதிரு

மொழிமுப்ப தீரெழுப தாய்

வடித்துஆ ரணப்பொருள் நயம்பெற்ற பாமாலை

வாசமலர் மாலைஅரு ஞம்

மல்விநாட் டினுள்வில்லி புத்தூர் மடந்தையை

வழுத்துபின் ளைக்கவியை யே

படிப்பார் அதன்பொருள் வடிப்பார்இவ் உலகினில்

பாவித்த செல்வம்எல் லாம்

பாரித்த படிஎய்தி எய்துவார் நித்தரொடு

பழகும்ஒரு பேரின்ப மே. (1s5)

தாமரை மலர்போன்ற திருவடியில் பிறந்த கங்கை நீரை அனைத்துல கினர்க்கும் அண்டத்துக்கு அப்புறத்து வாழும் அயன் முதலானவர்க்கும், இப்புறத்து வாழும் அனைவர்க்கும் அமுதுபோல் அருளியவன் திருமால் அந்தக் கங்கை நீரைச் சிவன் தன் முடிாலையாகும் என்று புனையும7று அன்று அருளினான்.

அத்தகைய முழு முதலாகிய திரு அரங்கேசன் முதலாகிய முதல்வர் ஐவரும் மகிழும்படி, திருப்பாவையும் நாச்சியார் திருமொழி நூற்றி நாற்பதும் வடித்தளித்தமையால், எழுதாக்கிளவியி(ஆரணத்தின் பொருள்தயம் பெற்றது. அந்தப் பாமாலையும் மணமலர் மாலையும் அருளியவள் ஆண்டாள்.

மல்லி நாட்டினுள் அமைந்த வில்லிபுத்துரர் மடந்தையாகிய அவளைத் துதிக்கும்பிள்ளைத் தமிழ்க் கவியைப் படிப்பவரும் அதன் பொருள் வடித்துத் தருபவரும் இவ் உலகில் இறைவன் அருளிய செல்வம் முழுவதும் விரும்பியபடியே அடைவர்

முடிவில் நலமந்தம் இல்லதோர் நாட்டில் வானவர்களோடு பழகும் ஒப்பற்ற தொண்டாகிய பேரின்பம் அடைவர்.