பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 ல் பொழிப்புரை - த கோவேந்தன்

அமர்சொற் பொருளாய் அணிபெற் றுளதாய்

அடைவில் பலபலவாய் அவையிற் பலபா வினம் உற் றனவாம்

அகலக் கவிதான்்ஒர்

கமரிற் கவிழாது உலகத்து எமைஆள் கருணைக் கடலாய்வாழ் -

கலுழக் கொடிவா கனனைத் துறவோர்

கனியைப் புகழ்கோமான்

எமர்கட்கு இறையாம் வகுளப் பெருமான்

இயல்பைப் புகழ்நாவார்

இயலைத் தெளிவார் இசையைத் தெளிவார்

இறையைத் தெளிவாராம்

தமரைப் பெறவாழ் புதுவைப் பதியாய்!

தாலோ தாலேலோ!

சரதத் திருவே! பரதத் துவமே!

f தாலோ தாலோே (43)

விரும்புகின்ற சொல் அனைத்தும் உயர்பொருள் பெற்றனவாக இருத்தல் வேண்டும். பலவகை அணிகள் பெற்றிருத்தல் வேண்டும். வகை ப்படுத்துவதில் இலக்கிய வகையில்) பலபலவாய் இருத்தல் வேண்டும். அந்த வகையிலும் தரவு, தாழிசை, விருத்தம் ஆகிய பல பாவினம் உள்ள னவாதல் வேண்டும். எடுத்த பொருளை விளக்கமாகப் பிரித்துக் கூறுவ தால் (வித்தார அகலக் கவியாதல் வேண்டும். இவ்வளவு அழகுகளும் பொருந்தப் பாடும் கவிகளை நிலப்பிளப்பில் அமுதம் ஊற்றி வீண் ஆக் குவதுபோல் புல்லர்கள் காதில் கொட்டக் கூடாது.

உலகத்தில் எம்மை ஆள்கின்ற கருணைக் கடலாய் வாழ்கின்ற கலுழக் கொடியும் கலுழவாகனமும் உடைய பெருமானைத் துறவிகள் உண்ணும் கனியைப் புகழ்ந்த கவிக் கோமான் எங்களுக்குத் தலைவன் ஆகிய வகுளமாலை அணிந்த பெருமான் ஆகிய சடகோபன் திருக் குண ங்களைப் புகழ்கின்ற நாவுடையார்களும் இயல் தமிழைத் தெளிந்தவரும் இசைப் பண்களைத் தெளிந்தவரும் இறைவன் இவனே என்று தெளிந்த