பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாள் பிள்ளைத்தமிழ் 大 92

வரும் ஆகிய உறவினரைப் பெறும்படி வாழ்கின்ற புதுவைப் பதியாய்! தாலோ தாவேலோ! வாய்மைத் திருவே! எங்கும் நிறைசெல்வியே! தாலோ, தாவேலோ!

'கண்ணன் கருணா கரனொடு மால்செங்

கமலத்து அவர்போலும்

கண்கை கால்செங் கனிவா யினன் அக்

கமலத்து இலைபோலும்

வண்ணம் செறிமே ணியன்"என வேதிரு

வாய்மலர் பாடலினால்

வாழ்த்தலின் அக்கம லம்பா டும்பெரு

மான்என் வாழ்குருகூர்

அண்ணலின் ஒருதிரு மகளே கோயிலில்

அண்ணற்கு ஒருதங்காய்!

அடியவர் வாழ்வுற வருநங் காய் கற்

றவர்புகழ் தென்புதுவைத்

தண்ணந் துளவு எனும் நற்றாய்! பெற்றாய்!

தாலோ தாலேலோ! சரதத் திருவே! பரதத் துவமே!

f f தாலோ தாலேலோ (44) கண்ணன் அருளன்பன் (கருணாகரன் திருமால், செங்கமலத்து மலர் போன்ற கண்னும் கையும் காலும் செங்கனிவாயும் உடையவன் அந் தக் கமலத்து இலைபோன்ற வண்ணம் செறிந்த திருமேனியன் எனவே திரு வாய் மலர்ந்தருளும் திருவாய்மொழி (வேதப் பாடலினால் வாழ்த்துவதால், அக் கமலம் பாடும் பெருமான் என வாழ் குருகூர்த் தலைவரின் ஒரு திரு மகளே கோயிலின் அண்ணற்கு இராமானுசர்க்கு) ஒரு தங்கையே!

அடியவர் வாழ்வுற வருகின்ற நங்கையே கற்றவர் புகழ்கின்ற தென் புதுவையில், குளிர்ந்த அழகிய துளவு எனும் நற்றாய் பெற்றவளே!தாலோ தாலேலோ மெய்மைத் திருவே! அங்கிங்கெனாதபடி எங்கும் உள்ள வளே! தாலோ தாலேலோ!