பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 ல் பொழிப்புரை - த கோவேந்தன்

வளமைத ழைத்தவள் இளமைத னக்கு இசை

வடிவு ஒரு வர்க்கு இலையாம்

வதனம்.அ. தற்குஇணை மறுஅறு சித்திர

மதியம்எ னத் தகைசால்

அளகம்.அ. தற்குஇணை புயலது எனத்தவம்

அவைபெற வைத்ததுபோல்

அழகுபெ றப்பொலி திலகது தற்கு இணை

அவிர்பிறை கச்சுஅணிவார்

களபமு வைக்கு இணை கமலமு கைத்துணை

கயல்கள்வி ழிக்கு இணையாம்

கடலின்உ தித்துஎழும் அமுதம்பொ ழிக்குஇணை,

கதிர்நகை ஒப்பதுவே

தளவம்எ னத்தவம் அவைபெற வைத்தனை!

தாலோ தாலேலோ!

சதுமறை யைத்தெரி புதுவையுள் உத்தமி

தாலோ தாலேலோ! (45}

வளமை மிகத் தழைத்தவள், இளமை தனக்கு இசைந்த வடிவு வேறு ஒருவருக்கும் இல்லையாம்.

முகத்துக்கு இணை மறு அற்ற அழகிய மதியம் ஆகும் எனத் தகை சான்றவள். குழலுக்கு நிகர் முகில் ஆகும் எனத் தவம்பெற மேலே சொன்ன பொருள்களை வைத்ததுபோல், அழகுபெறும்படி பொவிகி ன்ற திலகம் அணிந்த நெற்றிக்கு இணை, பிறை ஆகும். மார்பாடை இர விக்கை) அழகியவார் அணிந்த கலவைச் சந்தனம் பூசிய முலைக்கு இணை, தாமரை மொட்டு இரண்டாகும். கயல்மீன்கள் கண்களுக்கு

இணையாகும்.

கடலில் உதித்து எழுந்த அமுதம் மொழிக்கு இணையாகும். ஒளி பொருந்திய பல்லுக்கு நிகராவது முல்லை மொட்டு என்று கூறும்படி மேலே சொல்லியவற்றைத் தவம் பெற வைத்தவளே! தாலோ தாவேலோ!