பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்மறைகள் தெரிந்த புதுவையுள் மேன்மையளே! தான்ே: தாலேலோ!

அளைசெறி வளைதவழ் கடல்கெழு திடல்விளை அமுது ஏழும் அமுதுடன்வழ் -

அரவனை விழிதுயல் அமுது இரு நதியுள்

அரங்கத்து அமுது எனவே

முளைமதி நதிபதி சடிலியும் முளரியுள்

முதல்வனும் அடிதொழவாழ்

முதல் இரு புயவரை யினும் இரு செவியினும்

முழுகிய தொடைஎனலாய்க்

கிளையொடு கிளைகளி அளிநறை தெரிகில

கிளைஏழ் பிலகரிகைக்

கிளைஇந் தளம்நை வளமுழை தேசாக்

கிரிகுச் சரிபாடத்

தளைஅவிழ் நறுமலர் மாலிகை தருவாய்!

தாலோ தாலேலோ! சங்கத் தமிழ்மா லிகையது சூடித்

լի | தருவாய் தாலேலோ (46) சேறு செறிந்த சங்குகள் தவழ்கின்ற கடலில் மல்கிய மேட்டில் விளைந்த அமுதில் எழுகின்ற அமுதுடனே வாழ்கின்றவன், அரவணை யில் விழிதுயில் அமுது (திருமால் இரு ஆறுகளிடையேயுள்ள அரங்க த்து அமுது அவன் என்றே, முளைத்த இளமதியும் கங்கை ஆறு பதித்த சடையுடைய சிவனும் தாமரை மலரில் வாழ் நான்முகனும் அடிதொழ வாழ்கின்ற முதல்வன். தோளாகிய மலைகள் இரண்டிலும் இரு காதுகளி லும் பதித்த பூமாலைபோலத் தம் கூட்டத்துடன் களி கொண்ட வண்டு கள் தோன்றக் கண்டு, தேன் இருக்கும் இடம் தெரிகிலவாகி இசை கிளை கின்ற ஏழு பண்கள் ஆகிய பிலகரி, கைக்கிளை, இந்தளம், நைவ ளம், உழை, தேசாக்கிரி, குச்சரியைப் பாடுகையில் மொட்டு விரிந்த நறுமலரால் கட்டியமாலிகை சூடித் தருபவளே! தாலோ தாலேலோ!