பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாள் பிள்ளைத்தமிழ் * 98

விரைவுடைய ஏழு குதிரைகள் பூட்டிய தேர் செலுத்திய கதிரவ னும், இருளைக் கடிந்தோட்டுகின்ற அமுதக் கதிர்களையுடைய வெண்ணி வவும், வானில் வலமாக வருகின்ற கொடுமுடியுடைய வட மலையின் மேலே போய், இராவணன் செய்யும் துன்பத்தை எவ்வாறு தீர்ப்பது என்று ஆராய்வார் ஆயினர்.

தடவுகின்ற தீத்தழல் போல் சுடுகின்ற கொழுப்பும் குருதியும் ஒழுக, இரவும் பகலும் ஒளிர்கின்ற ஆழி (சக்கரம்) சங்குகளை வலப்புறமும் இட ப்புறமும் பொருந்த அணிந்த பாம்புப் பள்ளியின்மேல், ஏறி (്ഖു/ நினைவு நினையாமல், துயில் கொள்ளும் திருமாலிடம் சென்றனர்.

"சிறியோம் ஆகிய எம்மையும் வழிவழி அடிமைகளாகக் கொள் ளும் ஒப்பற்ற பெரியபிராட்டி தன் இரு கைகளால் ஒரு திருவடியையும் மனம் இளகுகின்ற நிலப் பிராட்டி தன் இருகைகள்ால் மறு திருவடியை யும் வருடக் கண் துயில்கின்ற அழியாத மாயச் செயல்களை உடைய வனே கேட்பன எல்லாம் தரும் வள்ளலே!

இறைவனே! நின் திருவடிகளுக்கு யாம் அடைக்கலம் jf என்று ஒலிக்கின்ற அலை வீசுகின்ற திருப்பாற் கடலில் கண்டு எளிதாக முறையிட்டனர்.

அவ்வாறு முறையிட்ட தேவர்க்கு அடைக்கலம் அருளிய தேவனே, பதினான்கு உலகத்தாரும் வணங்குகின்ற இனிய தசரதன் மகன் எனத் தோன்றி, சீதையாகிய திருமகள், பூமியாகிய நிலமகள் ஆகிய இருமகளி ரும் தசரதனும் மனம் மகிழும்படி, சங்கும் ஆதிசேடனும் சகடமும் தம்பி யர் மூவராக உதித்தனர்.

கடல் சூழ்ந்த உலகில் உழுத கலப்பை அருளிய சனகன் மகளுடன் இல்லறம் நடத்துகின்ற காலத்துத் தாயாகிய கைகேயி சொல்லின்படி பிறவிப் பணிக்காக மரவுரி தரித்து பரந்த காடே நாடாக வாழ்பவராக வாழும் நாளில், சீதையைப் பிரிந்தாய்!

பின் அனுமன் நட்பொடு குரங்குகளின் அரசனாகிய சுக்கிரீவன் உறவும் உதவியாகக் கொண்டு கடலை அணை கட்டி, குரங்குகளாகிய காலாட் படையொடு அப் படைக்குத் தலைவன்ாக இலங்கை சென்றாய்!

உலகம் நலம்பெறும் பொருட்டும், அரக்கர் குலம் அழியும் பொருட்டும் அரக்கர் உயிர்மேல் ஓர் அம்பை ஏவினாய் போர் முடித்து, உணர்வோடு கலந்த உடலும் உயிரும் வேறல்லர். ஒருவரே என்னும்படி காதல் கூர்ந்த பெரிய பிராட்டியாகிய சீதையோடு பூத்தேர் மேல் உரிய திருநகர் அயோத்தியை அடைந்தாய்! ஒன்பான்(நவமணி பதித்த