பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

திருவிளையாடற்புராணம்

ஊரில் பாறாங்கல்லாகக் கிடக்கக்கடவது என்று சபித்தார். "விமோசனம்" எப்படி என்று கேட்டார்கள். ஆயிரம் ஆண்டுகள் அங்கே கல்லாகக் கிடந்த பின் அங்கு மதுரையில் இருக்கும் சோம சுந்தரக் கடவுளாக யாம்வருவோம். அட்டமாசித்திகளின் பெயர்களும் அவற்றின் விவரமும் அங்கு மீண்டும் கூறுவோம்" என்று அறிவித்தருளினார்.

அவ்வாறே அவ்வியக்கியர் அனைவரும் பட்ட மங்கையில் கெட்டொழிந்த கற்களாய்க் கிடந்தனர். ஆயிரம் வருடம் அகன்றபின் சோம சுந்தரர் ஆசிரிய உருவில் அங்கு வந்து அவர்களை எழுப்பினர்; எழுந்த கன்னியர் அறுவரும் ஆசிரியனின் அருளைப் பெறக் காலில் விழுந்து வணங்கினர். அவர் அவர்கள் சிரமேற் கரம் வைத்து அட்டமாசித்திகள் இவை என அறிவித்து அருளினார்.

1) அணிமா சிறிய உயிரினும் தான் பரமாணுவாய்ச் சென்றிருக்கும் சிறுமையாகும்.
2) மகிமா பொருள்களின் உள்ளும் புறமும் வியாபித்திருக்கும் பெருமையாகும்.
3) வகிமா மேருமலையைப் போலச் சுமையாக இருக்கும் பொருளைத் தூக்கினால் எளிதாக (இலகுவாக) இருப்பதாம்.
4) கரிமா எளியதும் வலியதாகத் தோன்றுதல்.
5) பிராப்தி நினைத்த இடத்துக்குச் செல்லுதல்.
6) பிராகாமியம் கூடுவிட்டுக் கூடு பாய்தல்; எங்கிருக்கும் பொருளையும் தருவித்து அடைதல்

எதையும் காணுதல் முதலியன.