பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தண்ணீர் பந்தல் வைத்த படலம்

107

வெற்று வேட்டு ஆகிய இராசசிங்கமும் சிறைப்பட்டனர். காவலர்கள் அவர்களைக் கட்டி இழுத்து வந்தனர். அவர்களை என்ன செய்வது என்று தெரியாமல் சுந்தரரிடம் முறையிட்டான்.

'அறம் பிழைக்க மாட்டாய் நீ; அறிவுள்ள உனக்கு நான் சொல்ல ளேண்டியதில்லை; நீயே முடிவு செய்து கொள்" என்று இறைவன் அசரீரியாக அறிவித்தார். பகைவனை மன்னிக்கும் பண்பு அவனிடம் இருந்தது: சோழனை விடுதலை செய்து யானை தேர் குதிரை பொருள் சில தந்து நீ போய் ஊர் சேர்" என்று கூறி அனுப்பி வைத்தான்.

தன் தம்பியையும் மன்னித்து அவன் செல்வத்தையும் செருக்கையும் களைந்து அவனை அடக்கி ஆணவம் நீக்கி விட்டான். 

36. இரசவாதம் செய்த படலம்

பாண்டிய நாட்டில் திருப்பூவணம் என்னும் சிவத் தலத்தில் ஆடல் பாடல் அழகு இம்மூன்றும் கூடிய நடனக்காரி ஒருத்தி இறைவனிடம் ஆழ்ந்த பற்றும் அடியாருக்குத் தொண்டும் செய்து வந்தாள். தான் ஈட்டும் பொருளை எல்லாம் தன்னை நாடி வரும் சிவ பக்தர்களுக்குத் தந்து அவர்களைப் போற்றி வந்தான்.

தான் சிவனுக்கு ஒரு திருஉருவம் செய்ய வேண்டும் என்று விரும்பினாள். அப்படிவம் செய்யத் தன்னிடம் பேர்திய பொன் இல்லையே என்று கவலை கொண்டாள். இறைவனிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்து வேண்டு கோள் விடுத்தாள்.