பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

125

திருவிளையாடற்புராணம்

மனைவியிடம் "நீ ஏனோ தானோ என்று இருக்காதே. ஈழ நாட்டுக்காரி அவள் இசைவாதுக் கழைத்தால் முடியாது; என்று சொல்லாதே பாட ஒப்புக்கொள்" என்றான். இருவரையும் மூட்டிவிட்டான். இசைப் போட்டி நடந்தது; ஈழ மகளே வெற்றி பெற்றதாக அரசன் ஒரு சார் தீர்ப்புக் கூறினான். அதை அவையோரும் ஆமோதித்தனர்.

"கவர்ச்சியால் தவறாகத் தீர்ப்பு அளித்தாய்; அவள் அழகி என்பதை ஒப்புக்கொள்கிறேன்; ஆனால் இசையரசி அல்ல" என்றாள்.

"மற்றொரு நாள் பாட வை; பார்க்கலாம்' என்றாள்" பாடினி.

மறுநாளும் அதே தீர்ப்பு வழங்கப்பட்டது "மகேஸ்வரன் தீர்ப்புத்தான் ஏற்றுக் கொள்ள முடியும்; கோயில் முன் பாடுவோம்; அங்கே இந்த மகாசபையர் ஆண்டவனுக்கு அஞ்சித் தீர்ப்புக் கூறுவர்; நீயும் நடுநிலை பிறழ மாட்டாய்" என்றாள்.

"அப்படியானால் தோற்பவர் மற்றவர்க்கு அடிமை இதற்கு ஒப்புக்கொள்கிறாயா?" என்று அரசன்கேட்டான்.

"ஆண்டவனுக்கு அடிமையாகிவிட்ட என்னை யாரும் அடிமைப்படுத்த முடியாது. இறைவன் என்னைக் கைவிட மாட்டான்" என்றாள் பாடினி.

பாடினி இறைவன் திருக்கோயில்சென்றுமுறையிட்டாள். "கவலற்க பாடட்டும்; நாம் வந்து உதவுவோம்" என்று வாக்கு எழுந்து அவளை ஊக்குவித்தது.

இறைவன் இசைப்புலவர் வடிவில் அவையில் வந்து அமர்ந்தார். மூன்றாம் நாள் முடிவு கூறுவது நிச்சயம் என்று அனைவரும் காத்திருந்தனர்.