பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




45. பன்றிக் குட்டிக்குப் பால் கொடுத்தபடலம்

குரு விருந்து துறை என்னும் ஊரில் சகலன் என்னும் பெயரினன் ஒரு வேளாளன் இருந்தான். அவன் மனைவி சகலை என்பாள் பத்துக்கு மேல் இரண்டு புதல்வர்களைப் பெற்றாள். பன்றி குட்டிகளைப் போடுவதைப் போல் அளவு மிக்குப் பிள்ளைகளைப் பெற்றாள் அவர்களை வளர்ப்பதில் கருத்தும் கவலையும் செலுத்தவில்லை' செல்வம் கொடுத்து வளர்த்து அவர்களைப் பாழாக்கி விட்டார்கள். விதிவசத்தால் சதிபதிகள் இருவரும் உயர்கதி அடைந்து விட்டார்கள். அடக்குவதற்கும் அன்புடன் அணைப்பதற்கும் அன்னையும் தந்தையும் இல்லாமல் போய்விட்டார்கள்.

ஊர் சுற்றும் தறுதலைகளாக மாறிவிட்டார்கள். பெரியவர்களை மதிக்கும் பெருமை அவர்களிடத்தில் இல்லாமல் போய்விட்டது. தேவ குருவாகிய பிரகஸ்பதி அங்கே மதுரையில் தவம் செய்து கொண்டிருக்க அவருக்குத் தொல்லைகள் தந்தனர். கல்லெடுத்து எறிந்து அவர் சினச் சொல்லை எழுப்பி வைத்தார்கள். வேளாளராய்ப் பிறந்த உங்களைப் பிள்ளைகள் என்று சொல்வதை விடப் பன்றிகள் என்று தான் சொல்ல வேண்டும்' என்றார் அவர்.

நன்று என்று கூறி நகைத்தார்கள். ' பன்றிகளாகவே பிறக்கக் கடவீர்' என்று சாபம் இட்டார். சாபம் கேட்டவுடன் தாங்கள் செய்த பாவத்துக்கு வருந்தினர். வீணாகக் கோபத்தை எழுப்பிவிட்டோமே என்று அழுதவாறு சாபம் தீர வழி கேட்டனர். மறுபடியும் மனிதராக ஆக வேண்டுமானால் உங்களைப் படைத்த பிரமன் தான் வரவேண்டும்; நீங்கள் சோறு தண்ணீர் இன்றிப் பன்றிகளாகத் திரியும் போது உம்மீது இரக்கப்பட்டுச் சிவனே தாய்ப்பன்றியாக