பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கரிக்குருவிக்கு உபதேசஞ் செய்த படலம்

131

காகமாகவும் பிறக்கவில்லை. கொத்தித் தின்று உயிர் வாழும் குருவியாகவும் பிறக்கவில்லை. இரண்டும் சேர்ந்த தனிப்பிறவி இது" என்றார்.

"தருமங்கள் பல செய்தவர் ஆயினும் அவர்கள் கருமங்கள் அனைத்தும் விரும்பத்தக்கவையாக இருக்க வேண்டும். பாவ காரியம் சில செய்ததால் இப்பிறவியில் பரிதவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தவறு நினைத்துத் திருந்தி விட்டதால் அதனை மன்னித்து ஏற்றமிகு வாழ்வு தரவேண்டுவது நம் கடமை" என்றுகூறி அக்கரிக்குருவியை ஆட்கொண்டார்.

"உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டார்

"வலிமை வேண்டும்; கரியான் என்ற பெயர் மாறி வலியான் என்ற பெயர் நிலவ வேண்டும்" என்று கேட்டுக் கொண்டது.

"அப்படியே ஆகுக" என்று இறைவன் அருள் செய்தார்.

"எனக்கு மட்டுமல்ல; எங்கள் இனத்துக்கே இப்பெயர் நிலவ வேண்டும்" என்று கேட்டுக் கொண்டது.

"தக்கவன் வாழத் தன் கிளையும் வாழும் என்னும் பழமொழிக்கேற்ப அப்பறவை இனத்துக்கே இப்பெயர் அமைவதாயிற்று. 

48. நாரைக்கு முத்தி கொடுத்த படலம்

பாண்டிய நாட்டிலே தென் திசையில் ஓர் ஊரில் ஒரு தாமரைக் குளம் இருந்தது. அதில் உள்ள மீன்களைத் தின்று வாழ்ந்து வந்த நாரை குளம் வற்றிப்போக அதை