பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

திருவிளையாடற்புராணம்

விட்டுப் பறந்து நீண்ட தூரம் சென்று காட்டிலே ஒரு வாவியை அடைந்தது. அங்கே அளவற்ற மீன்கள் அக்குளத்தின் வளத்தைக் காட்டின. அங்குமுழுகிக் குளித்துத் தவம் செய்து வந்த முனிவர்களின் மேனியில் பட்டு அவை புனிதம் பெற்றன. பட்டினி கிடந்தாலும் அவற்றைத் தொட்டு உண்பதற்கு அந்நாரை விரும்ப வில்லை.

அம்முனிவர்கள் அத்தீர்த்தத்தில் முழுகிக் கரை ஏறி மதுரைப் புராதனம் குறித்து மதுரமாகப் பேசி அதன் தீர்த்தம் தலம் மூர்த்தி இவற்றைச் சிறப்பித்துப் பேசினார். அதைக் கேட்டு அந்த நாரை தானும் அங்குச் சென்று பயன் அடைய விரும்பியது.

மதுரை பொற்றாமரைக் குளத்துக்குச் சென்று அதில் முழுகி ஈசனை வழிபட்டது. அதில் துள்ளி எழுந்த மீன்களை அள்ளித் தின்ன ஆசைப்பட்டது. பசி எடுத்தும் அதன் சுவை தன்னை ஈர்த்தும் அங்கே மீன் பிடிக்க விரும்பவில்லை.

அக்குளத்து மீனை உண்பது அதன் புனிதத்தைப் பாழ்படுத்துவதாகும் என்று நினைத்தது; மீன் உண்ணாமலேயே பட்டினி கிடந்தது. ஒட்டிய வயிற்றோடு இறைவனை வழிபட்டுக்கொண்டு வந்தது.

நாரை வடிவத்திலேயே இறைவன் அதற்குக் காட்சி அளித்து, நீ, வேண்டும் வரம் யாது?’ என்று கேட்க அதற்கு அந்தநாரை தனக்கு என்ன வேண்டும் என்பதை விடுத்து அக்குளத்துப் புனிதத் தன்மையைப்போற்ற வேண்டிய தேவையை வற்புறுத்தியது.