பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாரைக்கு முத்தி கொடுத்த படலம்

133


அக்குளத்தில் மீன்களே இருக்கக்கூடாது என்று நாரை கேட்டுக் கொண்டது. மீன் இருந்தால்தானே அவற்றைப் பறவைகள் தின்ன வேண்டி வரும்; தின்றால் அவை பாவத்துக்கு ஆளாக வேண்டிவரும்; அதனால் குளத்தில் மீன்கள் எந்தக்காலத்திலும் தோன்றக்கூடாது என்று வேண்டிக்கொண்டது. நாரையின் பக்தியையும் தூய உள்ளத்தையும் மதித்து இறைவன் அதற்கு முத்தி அளித்துச் சிவலோகம் சேர்த்துக் கொண்டார். நந்தி கணத்துள் அது ஒன்றாகச் சேர்க்கப்பட்டது. 

49. திருவாலவாயான படலம்

சுகுண பாண்டியனுக்குப்பின் அவனுடைய வாரிசுகளில் குறிப்பிடத் தக்கவன் வம்மிச சேகர பாண்டியன் ஆவான். அவன் காலத்தில் மதுரை நகர் விரிவடைந்தது. மக்கள் பெருக்கம் அதிகம் ஆகஆக வீடுகளும் தெருக்களும் பெருகிப் புறநகர்ப் பகுதிகள் விரிவடைந்தன. நகர் ஆட்சி கட்டுக்குள் அடங்காதது ஆயிற்று.

அரசனுக்கு மதுரை நகர் எல்லை எது என்ற ஞானம் இல்லாமல் திட்டமிட்ட பணிகளைச் செய்ய முடியாமல் போயிற்று.

அந்நகரத்தின் எல்லை எது என்று தெரியாமல் இருந்ததால் கிராமம் எது நகரம் எது என்ற வேறுபாடு மறைந்து விட்டது. அதனால் ஆட்சிச் சிக்கல் ஏற்பட்டது: வரம்பு மீறிய எல்லையையும் அவன் கட்டிக் காக்க விரும்ய வில்லை.

மதுரையின் புனிதமும் பிற எல்லைகளின் கலப்பால் கெட்டு விடுகிறது என்பதால் இறைவனும் அது செயற்-