பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்கப் பலகை தந்த படலம்

137

மற்றவர்கள் இருந்தால் உனக்குப் போதுமா? பிரமனிடம் உலகம் ஞானத்தை எதிர்பார்க்கிறது. அதை எடுத்துச் சொல்லக் கல்வித் துணையாக நான் இல்லாமல் எப்படி இயங்க முடியும். நான் அப்படிப் பெரிய தவறு ஒன்றும் செய்யவில்லையே; இசைக் கலை என்னை இழுத்தது; அதை நீர் வசைச் செயலாகக் கருதுவது பொருந்துமா? ஊனப் பிறவி எடுத்து உழல்வதைத் தவிர்த்து ஞானப் பிறவி எடுக்கும்படி சபியுங்கள்' என்றாள்.

அவ்வாறே அதனை மாற்றிப் பாண்டிய நாட்டில் அகரம் நீங்கலாக மற்றய எழுத்துக்கள் நாற்பத்து எட்டும் நாற்பத்தெட்டுப் புலவராகப் பிறக்கட்டும் என்று சாபத்தை மாற்றித் தந்தார். அகரம் முதல் எழுத்து; அது போல் ஆதிபகவனே உலகத்துக்கு முதல்வனாவான்; சோமசுந்தரர் தாம் அம்முதலிடத்துக்குப் புலவராக வருவார்' என்று கூறி அருளினார்.

அவ்வாறே நாற்பத்தெட்டு எழுத்துக்களும் நூற் புலவர்களாகத் தோன்றினர். அவர்கள் வடமொழியும் தமிழும் நன்கு கற்றவராக விளங்கினர். அகத்தியர் முதலாகத் தொல்காப்பியர் வரை எழுதிய இலக்கண நூல்களை ஆராய்ந்தனர். முன்னோர் பாடிய பாடல்களைத் தொகுத்து அருளினர். அவர்களும் அகம் புறம் என்னும் பொருள் பற்றிப் பலபாடல்களைப் புனைந்தனர். அவர்களை எல்லாம் அழைத்துச் சோமசுந்தரர் ஒரு புலவராக அவதரித்து மதுரைக்குக் கொண்டு வந்தார்.

பாண்டியன் வம்மிச சேகரனைச் சுந்தரர் கோயிலுக்கு வடமேற்கே மண்டபம் ஒன்றைக் கட்டி அதிலே அவர்