பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

திருவிளையாடற்புராணம்

களை அமர்த்தினார். அது கண்டு பழம் புலவர்கள் சிலர் மனம் புழுங்கினர். புதுப்புலவர்கள் சிலர் அங்கு இடம் தேடி வந்தனர். அவர்கள் இந்த நாற்பத்து எட்டுப் புலவருடன் வாதிட்டும் புதிய கவிதைகள் புனைந்தும் கல்வித்திறம் காட்டியும் அங்கு இடம் பிடிக்க முனைந்தனர் வந்தவர்கள் அனைவரும் தோற்று அங்கு இடமின்றித் திரும்பினர்.

இந்த வாதுகளையும் மோதல்களையும் தவிர்க்கப் புலவர்கள் சோமசுந்தரக் கடவுளிடம் முறையிட்டனர். அவர்கள் குறை கேட்டுக் கறை மிடற்றன் ஆகிய சுந்தரர் புலவர் வடிவில் வந்து கையில் ஒரு பலகையை ஏந்தி வந்தார். "இது ஒரு முழம் சதுர அளவு கொண்டது; ஓர் ஆள் அமரக் கூடியது; புலவர்கள் அமர இது நீளும் தன்மையது; தகுதி உடைவர்க்கே இது இடம் கொடுக்கும்" என்றார். சங்கப் பலகை அம்மண்டபத்தில் வைக்கப்பட்டது. பரம் பொருளாகிய இறைவனைத் தலைமைப் புலவராகக் கொண்ட அந்தத் தமிழ்ச் சங்கம் பல பாடல்களைப் படைத்துத் தந்தது. முன்னோர் பாடிய பாடல்கள் பலவற்றை ஆராய்ந்தது. அவற்றை யார் பாடியது என்று இனம் காண முடியாமல் அவர்கள் தடுமாறினர். எட்டுத் தொகை, பத்துப்பாட்டு என வழங்கும் சங்கப் பாடல்களைப் புலவர்கள் பெயர் அறிவித்து இன்னார் பாடியவை என்று தெரிந்து சுந்தரர் பிரித்துக் காட்டினார். மற்றும் அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, கலித்தொகை, ஐங்குறுநூறு, நற்றிணை, பரிபாடல், பத்துப்பாட்டு எனப் பொருள் பற்றியும் அடி வரையறை பற்றியும் அவற்றைத் தொகுத்துத் தந்தனர். அச்சங்கத்தில் பங்கு கொண்டவர்களுள் கபிலர், பரணர்,