பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்திரன் பழிதீர்த்தபடலம்

13


தேவர்கள் தம் தலைவனைக் காக்க வழியில்லாமல் தவித்தனர். அந்த பாவத்துக்குப் போக்கிடம் தேடினர். அப்பாவத்தை அவர்கள் தெய்வபலத்தால் திசை மாற்றித் திருப்பிவிட்டனர்.

அது பெண்ணின் பூப்பிலும், நீரின் நுரையிலும், மண்ணின் உவர்ப்பிலும், மரத்தின் பிசினிலும் பாய்ந்தது; அவனை விட்டு விலகியது. தீமையைத் தாங்கிய-இந் நால்வரும் தேவரை அணுகி இதனால் தமக்கு என்ன நன்மை என்று கேட்டனர்.

பூப்படைந்த பாவையர் புதுப்பொலிவோடு விளங்கிக் கணவனின் சேர்க்கையைப் பெறுவர் என்று கூறப்பட்டது. நுரையை ஏற்ற தண்ணிர் இறைக்க இறைக்க ஊறும் என்றும், மண் தோண்டத் தோண்ட அக் குழிகள் புதிய மண் கொண்டு நிரப்பப்பெறும் என்றும், மரம் வெட்ட வெட்டத் தழைக்கும் என்றும் கூறப்பட்டன. பிறர் துன்பம் துடைப்பவர் தாம் இன்புற்று வாழ்வர் என்னும் நியதிக்கு இவர்கள் இலக்காயினர்.

பாவச் சுமை நீங்கிய தேவர்களின் தலைவன் மீண்டும் ஆட்சி ஏற்று மாட்சி பெற வாழ்ந்தான்; இழந்த செல்வம் மீண்டும் நிலை பெற்றது; தொடர்ந்த பாவமும் அவனை விட்டு நீங்கியது; எனினும் பழி மட்டும் விடவில்லை; செத்த அசுரனின் தந்தை துவட்டா என்னும் துஷ்டன் பழிக்குப் பழிவாங்க நினைத்தான். விஞ்ஞான உலகத்தைவிடப் புராண உலகம் ஆற்றல் வாய்ந்ததாக விளங்கியது மந்திர சக்தியால் எதையும் சாதிக்க முடிந்தது. விஞ்ஞானம் ஆக்கத்திற்கும் பயன்படுகிறது: அழிவிற்கும். அதே போலத்தான் அக்கால வேள்விகளும் யாகங்களும். வேள்வி என்பது வேண்டுவதைப் பெறுவதற்-