பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

திருவிளையாடற்புராணம்

அரட்டைகளை யார் உள்ளே விட்டது என்று நந்தியை விரட்டினார். சொந்தப்பிள்ளைகள் ஆயிற்றே என்று எந்தத் தடையும் செய்யவில்லை என்று சொல்லிப் பார்த்தான்."கடலில் கோள்சுறாவாக நீ நாள் கடத்துக" என்று சாபமிட்டார் முருகனை ஊமையனாக மதுரையில் வணிகன் வீட்டில் பிறக்கத் தண்டித்தார். ஏற்கனவே யானைமுகமும் பானைவயிறும் பெற்றவனுக்கு அதைவிட வேறு தண்டனை கொடுக்கமுடியாது என்பதால் அவனை மன்னித்து விட்டு விட்டார்.

இஃது இவ்வாறு இருக்கப் பாண்டிய நாட்டில் கீழைக் கரையில் பரதவர் தலைவன் ஒருவனுக்கு மகப்பேறு இல்லாமல் சோமசுந்தரரிடம் முறையிட்டுக் கொண்டிருந்தான். புன்னை மரநிழலில் அன்னை உமையாள் சின்னக் குழந்தையாகத் தவழ்ந்து கிடந்தார். அக் குழந்தையை வாரி எடுத்துக் கொண்டு தன் மனைவியிடம் தந்து அவள் ஏக்கத்தைப் போக்கினான். மகள் வளர்ந்து கதாநாயகியின் அந்தஸ்தைப் பெற்றாள்.

கடலில் நந்தி சுறாவாகப் பிறந்து மீனவர் வலைக்குத் தப்பித் திரிந்தது. அந்தச் சிறுவர்கள் சிதறிய வேத நூல்களைத் தேடிக்ரை சேர்த்தது. அதை மீனவர்கள் அடக்க முடியாமல் இடக்கு விளைவித்தது. மீனவர் தலைவன் யார் அதைப் பிடித்து அடக்குகிறானோ அவனுக்கே தன் மகள் உரியவள் என்று கூறி ஒரு சனகனாக மாறினான்

இறைவன் மீனவ இளைஞனாக அங்கு வந்தார். "நீ யார்? செய்தி யாது?" என்று மீனவன் கேட்டான். "வலை வீசி இங்குப் பிழைக்க வந்தேன்" என்றார். "அலை வீசும் கடலில் உள்ள முரட்டுச் சுறாவினைப் பிடித்தால் பரிசு தருவேன்" என்றான்.