பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பரி நரியாகிய படலம்

163

யார் வீட்டுப் பணம் இது; மக்கள் பணம்; அவர்களைக் காக்கக் குதிரைகள் வாங்கச் சொன்னால் கோயில் கட்டிக் கும்மாளம் போடுகிறான் இவன். இவனைக் கட்டி வைத்து அடியுங்கள்" என்று அரிமர்த்தன பாண்டியன் அரி என முழங்கினான்.

வைகை ஆற்று மணலில் நடுப்பகலில் வாசகரை நிறுத்திவைத்து நிதி கொண்டுவந்து வைக்க என்று சொல்லிச் சவுக்கால் சாடினார். பட்டுப்போன்ற அவர்மேனி சல்லடைகள் ஆயின, குருதி வடியும் வடிவுகள் கண்ணீர் வடித்தன. தண்ணீர் இல்லாத அந்த வைகை குருதியாகிய தண்ணீரைத் தாங்கிச் செந்நிறம் பெற்றது

"இனி பொறுப்பதில்லை; அவன் கதறி அழுவதை நாம் தாங்கிக் கொள்ள முடியாது" என்று சிவனார் வைகைக்கு ஆணையிட்டார்.

நீ காட்டு யானைபோலச் சீறிப் பாய்க; கடல் உன்னிடம் தோற்க வேண்டும்; உன் மிடல் கொண்டு தாக்கு; கரைகளைப் போக்கு, ஊரை அழிக்க நீ புறப்படுக" என்று ஆணையிட்டார்.

காலைச் சுட்ட வெப்பம் தணிந்தது, வெள்ளம் வருதல் கண்டு ஊரவர் அஞ்சி அலறினர். அடைத்துக்கொண்டிருந்த ஆட்கள் தற்காப்புக்காக அந்த இடத்தை விட்டு அகன்றனர். கரை உடைத்துச் செல்லும் வெள்ளம் கண்டு