பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/178

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

திருவிளையாடற்புராணம்


சைவர்களாக மாறினர். பலர் தாம் அடைந்த தோல்வியை ஒப்புக் கொண்டு வலியக் கழுவில் ஏறி உயிர் துறந்தனர். எஞ்சியவர் ஆணைக்கு உட்பட்டுக் கழுவில் ஏற்றப்பட்டன்ர். சமணம் தலைசாய்ந்தது; சைவம் தலை நிமிர்ந்தது.

மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் அரசனைச் சைவ வழிக்குக் கொண்டு வந்து அவனைச் சைவனாக்கியதோடு நாட்டு மக்களிடமும் சைவத்தைப் பரப்பினர். 

64. வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்

கடலோரக் கவிதை என்று சொல்லத்தக்க அழகுடைய கடற்கரைப் பட்டினத்தில் செல்வம்மிக்க வணிகன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒரு மகள் பிறந்தாள். அவள் கன்னிப் பருவம் அடைந்து தன்னிகரற்ற அழகியாக விளங்கினாள். தன் தங்கை மகனுக்கே மணம் முடிக்கக் கருதினர். அவன் ஏற்கனவே மணமானவனாக இருந்தும் உறவு கெடக் கூடாதே என்பதால் இந்த முடிவுக்கு வந்தனர். அவளும் அவனையே மணக்க உறுதி செய்து கொண்டாள்.

காலன் அவர்களுக்குக் காலம் தரவில்லை; அதற்குள் அவள் தந்தையின் முடிவு செய்யப்பட்டது; தொடர்ந்து அவன் மனைவியும் மரணம் அடைந்தாள். சாவதற்கு முன் இந்த விருப்பத்தை ஊரவர்க்கும் சுற்றத்தினருக்கும் அவர்கள் சொல்லிச் சென்றனர்.

அவன் தங்கையின் மகன் இச் செய்தி அறிந்து தனியவளாக இருந்த அவளைத் தனக்கு இனியவளாக