பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்

177

ஆக்கிக் கொள்ள மதுரை வந்து சேர்ந்தான். அவளை அழைத்துக் கொண்டு தன் சொந்த ஊர் நோக்கிச் சென்றான். வந்த வழியில் அத்தமனம் ஆயிற்று. அதனால் காட்டுவழியிலேயே அன்று இரவு தங்குவது எனத் தீர் மானித்தனர்.

நள்ளிரவில் மெய்ம் மறந்து உறங்கும் போது உயிர் துறந்து போகும் ஒரு நிகழ்ச்சி ஏற்பட்டது. அரவு ஒன்று வந்து கரவு செய்தது; நஞ்சு தலைக்கேறி அவனைத் துஞ்ச வைத்தது.

வணிகனின் மகள் செய்வது அறியாது கதறினாள். அவன் உடலத்தைத் தழுவிக் கொண்டு அழுதான்; பொழுது விடிந்ததும் அவள் அழுது அரற்றிய செய்தி அருகில் தலம் ஒன்றில் தங்கியிருந்த ஞானசம்பந்தருக்கு எட்டியது. இந்த அநியாய இறப்பை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தெய்வத்தை வழிபட்டு அவளுக்கு உய்வகை காண வேண்டும் என்று அவள் இருந்த இடம் தேடி நடந்து வந்தார். கண்ணீரும் கம்பலையுமாகத் தன் சரித்திரத்தைச் சொல்லிய சோக கீதத்தைக் கேட்டு அவர் உள்ளம் உருகி நீர் தெளித்து நிமலனை வழிபட்டு வேண்டிக் கொண்டு அவனை எழுப்பி உதவினார்.

"உறங்குவது போலும் சாக்காடு" என்ற குறள் அடி அவனைப் பொறுத்தவரை உண்மையாகியது. உறங்கி விழித்தது போல உயிர் பெற்று எழுந்தான்; அவன் ஞான சம்பந்தரின் கால்களில் விழுந்தான்; திருவடிபோற்றி வணங்கினான்.

செல்லும் ஊர் கேட்டு, நல்லுரை தந்து, அவர்களுக்கு விடை தந்தார். அதற்கு முன் ஒல்லும் வகையால் அங்கே