பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்திரன் பழிதீர்த்த படலம்

21

திருவமுது முதலியவற்றையும் கொண்டுவந்து படைத்தனர்.

இந்திரன் பொற்றாமரைக் குளத்தில் நீராடித் திருநீறு அணிந்து உருத்திராட்சரம் தரித்து அன்புருவாகச் சிவலிங்கப் பெருமானை வேத ஆகமவிதிப்படி மாலையிட்டு வணங்கி எழுந்து கும்பிட்டுக் கூத்தாடி இறைவனைத் துதித்தான். 'போற்றி போற்றி' என்று பாடல்கள் பல பாடினான்.

வந்தவன் இந்திரன் என்பதால் சிவனும் விரைவில் அவனுக்குக் காட்சிதந்து வேண்டுவதுயாது என்று கேட்கக் "கருணைக் கடலே! என் கொலைப் பழியை நீக்கிக் காத்து என்னைத் தூயவன் ஆக்கினாய்; பாவ விமோசனம் பெற்றேன்.

அன்பும் அருளும் உயர் பண்பும் பெறும் உள்ளம் உடையவன் ஆயினேன். ஆணவம் நீங்கி அடக்கம் என்பதை அறிந்தேன். அமரன் என்றும் அடக்கம் உடையவனாக இருத்தல் வேண்டும் என்ற பேருண்மையைக் கற்பித்தாய். ஆசானை அவமதித்த ஆணவம் அழிந்தது; அவசரப்பட்டுக் கொலைத் தொழிலைச் செய்த கொடுமைகள் என்னை விட்டு நீங்கின; என்றும் உன் திருவடித் தாமரை விழுந்து கிடந்து நித்திய பூசை செய்து நிலைத்து மன அமைதி பெற அருள் செய்ய வேண்டுகிறேன்" என்றான்.

"மாந்தரும் தேவரும் என்னை வணங்குவது முதற்படி: அதனால் அவர்கள் அடக்கமும் மனத்துாய்மையும் பெறுவர் என்பது உண்மைதான். அவர்கள் அரசர்க்குரிய கடமைகளிலிருந்து வழுவுவதை யான் விரும்ப மாட்டேன். எத்தொழில் செய்தாலும் ஏது அவத்தை பட்டாலும்