பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளை யானை பழி தீர்த்த படலம்

25

முன்பிறவியில் தான் பெற்றிருந்த பதவியையும் அதனை இழந்த அவதியையும் அறிந்தது. சிவனைச் சீர் பெற வணங்க விழைந்தது.

அங்கே பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி நறுந்தாமரை மலர்களைப் பறித்துக் கொண்டு இறைவன் திருத்தாளை வணங்கச் சிவலிங்கத்தைத் தேடியது. அங்கே சொக்கேசனின் திரு உருவத்தை நினைவுபடுத்தும் சிவலிங்கத்தைக் கண்டது. இந்திரன் வழிபட்டு விமானம்விட்டுச் சென்ற திருக்கோயில் அது என்பதை அறிந்தது. நீரும் மலரும் இட்டு நிமலனை வழிபட்டுப் போற்றியது. யானை செய்த வழிபாட்டுக்கு இறைவன் திருவுளம் இரங்கிக் காட்சி தந்து வேண்டுவது யாது?" என்று வினவினார்.

இந்திர விமானத்தைத் தாங்கும் எட்டு யானைகளோடு தானும் ஒரு சிற்பமாக அங்கு நிலைத்திருக்க வேண்டும் என வேண்டியது. அதன் கற்பனையைக் கேட்டுக் "கற்பக நாட்டில் இருக்க வேண்டிய நீ கடம்ப வனத்தில் இருப்பது ஏற்பது அன்று; இந்திரன் ஏறிச் செல்ல ஊர்தியின்றி அங்கே வாடுவான்; அவனை நாடிச் செல்வதே நீ எனக்குச் செய்யும் உயர் பணியாகும். தெய்வச் சிந்தனை உயர்ந்தது தான்; எனினும் உன் கடமையை விட்டு இங்கே இருக்க நினைப்பது மடமை யாகும்" என்று அறிவித்தார். "உடனே புறப்படுக" என்று பணித்தார்.

இந்திரன் ஏவல் ஆட்களும் யானையைத் தேடிவந்து அழைத்துச் செல்ல நின்றனர்; தன் ஆவல் அங்குச் சில பணிகள் செய்வது என்று சொல்லி அவர்களைத் திருப்பி