பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



திருவிளையாடற் புராணம்


பூஜைக்கு வேண்டிய பூக்களும், பனி நீரும், சந்தனமும், மற்றும் வாசனைப் பொருள்களும் தன் கையால் அவர்களுக்குக் கொண்டு வந்தான்; நான்கு யாம பூசைகளிலும் அவனும் கலந்து கொண்டான். அவனும் பொற்றாமரைக் குளத்தில் முழுகி ஆகம விதிப்படி இறைவன் தாளை வணங்கி மன நிறைவு பெற்றான்.

பொழுது விடிந்தது; தூக்கம் நீங்கிக் கோயிலைப் பார்த்தான்; தேவர்களில் ஒருவரும் அங்கு இல்லை; தெய்வம் மட்டும் அங்குச் சிவலிங்க வடிவில் காட்சி அளித்தது. மனித சஞ்சாரம் அற்ற அக்கோயிலுக்கு தேவர்கள் வந்து வழிபாடு செய்வதும் போவதும் அவனுக்கு வியப்பைத் தந்தன. ஊருக்குத் திரும்பியதும் முதற் செய்தியாக நாட்டு மன்னனுக்கு உரைப்பது என்று கொண்டான்.

அரசனை அன்று மாலையே சந்தித்துத் தான் கண்ட புதுமையைச் செப்பினான். இதனைக் கேட்ட பாண்டியன் அப்புதுமை பற்றிய நினைவோடு உறங்கச் சென்றான். அவன் கனவில் சித்தர் வடிவில் சிவன் வந்து காட்சி அளித்து அவனுக்கு அங்குக் கோயில் எழுப்பவழி கூறினார். கோயிலும், மண்டபங்களும் அமைத்து அழகிய நகர் ஒன்று அக்கடம்பவனத்தில் உண்டாக்க வேண்டும் என்று கூறிச் சென்றார்.

மறு நாள் பொழுது. விடிந்தது, அமைச்சர்களோடும் கட்டிடச் சிற்பிகளோடும் தனஞ்சயன் வழிகாட்டப் பாண்டியன் அவ்வனத்துக்குச் சென்றான், திக்குத் தெரியாத அந்தக் காட்டில் கலங்கரை விளக்குப் போல் ஒளிவிட்டுக் கொண்டிருந்த இந்திர விமானத்தைக் கண்டான். தெய்வ நினைவால் அவன் சிந்தை குளிர்ந்தான். அவன் எதிர்பார்க்கவில்லை; கனவில் கண்ட சித்தரே