பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்

மங்கையர்க்கரசியாகிய பாண்டியர் மகள் வேண்டிய உணவு சமைத்து ஈண்டிய முனிவர்களுக்கும் வேதியருக்கும் மன்னவர்க்கும் அருந்தி அகமலர்ந்து நன்னிதியும் பட்டு ஆடைகளும், பாக்கு வெற்றிலைசந்தனம் பூ முதலியனவும் தந்து வழி அனுப்பினாள். அதற்குப் பிறகு ஓய்வாகக் கணவன் அருகில் அமர்ந்து அன்புடன் உரையாடிக் கொண்டிருந்தாள். கடமைகள் முடிந்துவிட்டன என்ற கருத்தில் மனநிறைவோடு அங்கு இருந்தனர்.

சோறு சமைத்த மடைப்பள்ளி அதிகாரிகள் அன்னை பிராட்டியிடம் "சமைத்து வைத்த சோற்றில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூடத் தீரவில்லை. தின்பதற்கு ஆட்கள் இல்லாமல் அப்படி அப்படியே கிடக்கின்றன. தேவர்கள் வருவார்கள் கணங்கள் உண்பார்கள் என்றெல்லாம் நினைத்து மலைமலையாகக் குவித்து வைத்திருக்கிறோம். என்ன செய்வது அவற்றைத் தூக்கி எங்கே கொட்டுவது" என்று அவர்கள் தம் தொழில் முறைப்படி வந்து தொழுது உரைத்தனர்.

அன்னையார் அருகிருந்த மாப்பிள்ளையாகிய சிவபெருமானிடம் சிரித்துக் கொண்டே சொன்னார். "என்ன ஆயிற்று, உங்கள் சிவ கணம் தேவர்கள் ஆட்கள் ஏன் வரவில்லை. உங்கள் ஆட்கள் இவ்வளவுதானா? சமைத்து வைத்தது எல்லாம் வீணாகி விட்டதே?" என்று பேசினார்.

"நீ பாண்டியன் மகள் என்பது தெரியும். வேண்டிய செல்வம் உன்னிடம் குவிந்து கிடக்கிறது. திக்குகளில்இருந்து திறைகள் வேறு வந்து குவித்திருக்கின்றன. கற்பக