பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்

45


இவன் ஒருவனுக்கே சோறு போட முடியவில்லை. சிவகணம் அனைத்தும் வந்தால் என்ன செய்திருக்க முடியும் என்று நினைத்துப் பார்த்தாள்; ஆணவத்தால் அவசரப்பட்டுத் தன் மிகுதியை எடுத்துப் பேசியது தகுதியற்றது என்பதை உணர்ந்தாள்; கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது போல இப்பொழுது புதிய பிரச்சனை உருவாகியது; அவன் பசிக்கு அலைகிறான்; நீருக்கு உலைகிறான்; என்ன செய்வது; இறைவன் முப்புரத்தில் இட்ட தீ அவன் வயிற்றின் அடிப்புறத்தில் புகுந்துவிட்டதே என்று அஞ்சினாள்; பசி என்பது எவ்வளவு கொடுமையானது என்பதை அவன் நிலை காட்டியது; உயிர்களின் பசிக்கு உணவு இடுவது எளியது அல்ல என்பதைத் தடாதகை உணர்ந்தாள். இறைவனோடு போட்டி போட்டுக் கொண்டு பேசியது தவறு என்பதை உணர்ந்தாள்; போதும் ஒரு குண்டோதரன் என்று நினைத்து அமைதியாக இருந்தாள். 

8. அன்னக் குழியும் வைகையும் அழைத்த படலம்.

கருணைக் கடலாகிய சோமசுந்தரக் கடவுள் தடாதகைப் பிராட்டியைப் பார்த்து "இவன் ஒருவன் பசியை உங்களால் அடக்க முடியவில்லையே" என்று பரிந்து பேசினார். அவன் பசியால் துள்ளிக் குதித்தான். எது கிடைத்தாலும் அள்ளிப் பருக ஆவல் காட்டினான். உலகுக்கெல்லாம் உணவு அளிக்கும் அம்மை ஆகிய அன்னபூரணியை அழைத்தார். இறைவன் பணி கேட்டு தயிர்ச் சோற்றுக் குழிகள் நான்கினைக் கொண்டு வந்து நிறுத்தினாள்.

சோற்றைக் கண்டதும் பசி மூண்டது. அள்ளி அள்ளி வயிற்றில் போட்டு அடைத்தான்; வாங்கி வாங்கி வாய் மடுத்ததும் உடம்பெல்லாம் வயிறாக வீங்கியது. நீர்