பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எழுகடல் அழைத்த படலம்

49

மருமகனாகப் பெற்ற எனக்குச் சீவன் முத்தி அடையச் செய்வது முடியாதா” என்று மனம் குழைந்து பேசினாள்.

”என்ன அம்மாவிடம் கொஞ்சல்?”

”அது அவர்கள் உம்மிடம் கெஞ்சல்”

”சொல்லு நீ அதை; அதற்காக அஞ்சல்' என்றார்.

"கடல் வேண்டுமாம் முழுகி எழுவதற்கு, யாரோ முனிவர் சொன்னராம் உடம்புக்கு நல்லது என்று”.

”உடம்புக்கு அல்ல; உயர் தவத்திற்கு உகந்தது”.

"அந்த அவத்தை எல்லாம் எனக்கும் தெரியும்; மருமகனிடம் நேரே சொல்ல வெட்கப்படுகிறாள்”.

”மாமியாரின் லட்சணம் அது தானே; மெச்சினோம் நாம்; ஒரு கடல் என்ன ஏழு கடலும் கொண்டு வருகிறோம்”.

”அதற்கப்புறம் இங்கு மதுரை இருக்காது; கடல் தான் இருக்கும்” என்றாள்.

"கவலைப்படாதே ஏழுகடல் நீரும் வந்து குவியும்; அதற்கப்புறம் அது தானே வழியும்” என்றார். மதுரையில் கிழக்கே ஒரு குளத்தில் ஏழ்கடல் நீரும் வந்து விழுந்தது. ஏழு நிறங்களோடு அவை விளங்கின.

”காதற் பெண்ணின் கடைக் கண் பார்வையிலே விண்ணையும் சாடுவோம்' என்று பாரதி சொன்னது இங்கு உண்மையாயிற்று.

தடாதகைப் பிராட்டி காட்டிய குறிப்பில் விடையேறிவரும் விண்ணவன் ஆகிய சிவபெருமான் ஏழுகடலையும்