பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மலையத் துவசனை அழைத்த படலம்

51

என நினைத்த அளவில் மலையத்துவசன் மண் நோக்கி விண்ணிலிருந்து விரைவாக விமானத்தில் வந்து இறங்கினான்; கண் நிறைந்த அழகனாகிய சுந்தரனைக் கண்டு தழுவித் தன் அன்பைக் காட்டத் துடிதுடித்தான். இறைவனும் தன் மாமனைச் சந்தித்துத் தோள்களில் தழுவிக் கொண்டு பின் அருகு அவனை அமர்த்தினார்.

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ? மணப் பெண் போல நாணி அவன் முன்னே வந்து நின்றாள்.

"மகளின் மணத்தைக் காண நீர்வரவில்லையே" என்றாள்.
"அழைப்பும் ஆண்டவன் அருளும் அன்று கிடைக்க வில்லை" என்றான்.
"தவத்தின் பேறு அடைய நீர் பூதலத்துக்கு வந்தது என் பேறு" என்றாள்.
"கைப்பிடித்துக் கடலில் முழுகுவோம்" என்று கூறி இருவரும் நீரில் மூழ்கினர்.

வேதியர்கள் ஐந்தெழுத்து மந்திரம் சொல்லி மறை நூல் விதிப்படி சடங்குகள் செய்ய இருவரும் கடலில் நீர் ஆடினர்.

மலையத்துவசனும் காஞ்சனையும் புதுப்பிறவி பெற்றது போல் கரை ஏறிக் கறை நீங்கி இறை வடிவம் பெற்றனர். மானுட வடிவம் மாறித் தெய்வ வடிவம் பெற்றுவிட்டனர். அவர்களை அழைத்துச் செல்லத் தெய்வ விமானம் வந்து நின்றது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். சிவனை வணங்கிவிட்டு விடை பெற்றவராய் விண்ணுலகம் அடைந்தனர். .