பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை


தமிழகத்தின் பெருமையே சோழர்களும், பாண்டியர்களும், பல்லவர்களும் எழுப்பிய திருக்கோயில்கள்தாம். தேவாரம் திருவாசகம் பாடித் தமிழையும் சைவத்தையும் வளர்த்தார்கள். கோயில்கள் எழுப்பிச் சிற்பக்கலையை வளர்த்தார்கள். இந்தக் கோயிலுக்குப் பெருமை தேடத் தல புராணங்கள் எழுந்தன. மதுரையில் இன்று உள்ள மீனாட்சி கோயில் தொன்றுதொட்டு நிலைத்து இருப்பது. அதில் பொற்றாமரைக் குளமும் உள்ளது. இங்குக் குடியிருக்கும் ஈசன் சோமசுந்தரர் எனப்படுவார்.

கோயில், தலம், தீர்த்தம் இம் மூன்றின் பெருமையையும் வரலாற்றையும் திருவிளையாடற் புராணம் கூறுகின்றது. மதுரைக்குக் கூடல், ஆலவாய் என்று மற்றும் இருபெயர்கள் உள்ளன. இறைவனின் முடியில் சூடிக் கொண்டிருக்கும் பிறைச்சந்திரனின்று எழுந்த மதுரத்துளிகளைத் தெளித்து அதனை இனிமையாக்கியதால் அது மதுரை எனப்படுகிறது. மேகங்கள் கூடி மழையைத் தடுத்தமையால் கூடல் என்று பெயர் பெற்றது. இறைவன் அனுப்பிய பாம்பு மதுரையைச் சுற்றி எல்லை காட்டியதால் ஆலவாய் என்று பெயர் வந்தது. இந்நகரம் மதுரைக் கண்டம், கூடற்கண்டம், ஆலவாய்க் கண்டம் என மூன்று பிரிவுகள் பெற்றுள்ளன.

கம்பர். திருத்தக்கதேவர், சேக்கிழார் முதலிய மாபெரும் கவிஞர்கள் விருத்தப்பாக்களில் தெய்வத்திருக் கதைகளை எழுதிப் பரப்பினர். வில்லிபுத்தூரார் பாரதம் எழுதினார். இவர்கள் வழியில் இத்தல புராணத்தைப்