பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாறியாடின படலம்

79

கலைகளைக் கற்று இருக்கிறான். நீ ஒன்று குறைவாகக் கற்று இருக்கிறாய். பரதம் உனக்கு வராதா?" என்று தூண்டிவிட்டான்.

மானம் மிக்க அவன் அச்சொற்களைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை; வயது ஆனபோதும் பொருட்படுத்தாமல் தக்க ஆசிரியர்களைக் கொண்டு உடம்பை வளைத்து அப்புதிய கலையைக் கற்கத் தொடங்கினான்; அந்த அற்புதக் கலை கற்க உடல் உழைப்பும் பயிற்சியும் தேவை என்பதை உணர்ந்தான்; அவன் உடம்பு களைத்து நோதலை அறிந்தான்; உடம்பெல்லாம் வலி எடுத்தது.

இறைவன் பரதம் ஆடும்போது வலக் காலில் நின்று ஆடுவதைக்கண்டு இவ்வாறே காலை மாற்றிச் கொள்ளாமல் ஆடினால் அவருக்கு எவ்வளவு வருத்தம் ஏற்படும் என்று நினைத்துப்பார்த்து இடக் காலைத் துக்கி ஆடும் நிலை மாறி வலதுக் காலைத் துாக்கி ஆட வேண்டும் என்று விரும்பினான்; கால் மாறி ஆட வேண்டும் என்று தீவிரமாக நினைத்தான் இறைவனிடம் வேண்டினான்.

அவ்வாறு மாற்றி ஆடாவிட்டால் தன் உயிரை மாய்த்துக் கொள்வதாக மருட்டினான். வாளைத் தயாராகக் கையகத்து வைத்துக் கொண்டான். அன்பன் தொடர்ந்து தரும் வேண்டுகோளைத் தள்ள முடியாமல் இறைவனும் கால்மாறி ஆடிக் காட்டினார். இவ்வாறு இந்த நிலையிலேயே அடியவர்க்குக் காட்சி அருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். அது முதல் இன்று வரையும் மாறியாடிய கோலத்திலேயே இறைவன் காட்சி தந்து கொண்டிருக்கிறார்.