பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாபாதகம் தீர்த்த படலம்

87

வழிபடு, ஊனைச் சுருக்கி உள்ளொளி பெருக்கி நீ வாழ முற்படு; விரதங்களை மேற் கொண்டு தூயவனாக நடந்து கொள்க. நாளைச்கு ஒரு முறைதான் உணவு உட் கொள்ள வேண்டும்; வேளைக்கு மூன்று முறை சுற்றி வலம் வரவேண்டும்.

மற்றும் நீ எப்பொழுதும் விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டும்; மனம் நம்மை ஏமாற்றி விடும்; யாரும் பாக்கவில்லையே, நாம் தவறு செய்தால் என்ன என்று நினைக்கலாம், நீயே உனக்குச் காட்சியாக இருந்து மனம் நொந்து கொள்ள வேண்டி வரும்; அதுமட்டுமல்ல நமக்கு எல்லாம் மேலே இறைவன் ஒருவன் இருக்கிறான். அவன் நம் செயல்களைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான்; பாவங்களில் இருந்து தப்பமுடியாது; அவன் அருள் வேண்டி மனம் கரைந்து அழுதால் இறைவன் மன்னிப்பான்; நெருப்பில் புடம் வைத்துக் காய்ச்சும் பொன்போல நீ புத்தொளி பெறுவாய்; மறுபடியும் நீ மனிதனாக வாழலாம்; இளம் வயது; உன் வாழ்வு பாழாகக் கூடாது; திருந்தி வாழ்க' என்று சொல்லி அனுப்பினார்.

அவனும் அப்புண்ணிய தீர்த்தத்தில் முழுகி நீராடிப் பாவங்கள் தீர்த்து இறைவனை வழி பட்டு மேல்நிலை அடைந்தான்; அவன் செய்த மாபாதகங்கள் மன்னிக்கப்பட்டன. அவன் புதிய மனிதனாக மாறி அத்தகைய தவறுகள் செய்யக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து உயர்வு அடைந்தான். மறுபடியும் அந்தணனுக்கு உரிய நல்லொழுக்கமும், தெய்வ வழிபாடும், கல்வி நலமும் வாய்ந்தவனாகத் திகழ்ந்தான்.