பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அங்கம் வெட்டின படலம்

89

மனம் புழுங்கி வேதனை அடைய வேண்டி வரும். தன் குறையை ஆண்டவன் திருக்கோயிலுக்குச் சென்று அவனிடம் வெளிப்படுத்தினாள்.

சித்தனைச் சிவன் ஆசிரியர் வேடத்தில் சந்தித்து 'இந்த ஊர் மக்கள் காண வாட்போர் நடத்தி நம் கலைத் திறனைக் காட்டிக் கை தட்டலைப் பெறுவோம். நகர்ப் புறத்துப் பொது மேடைக்கு நாளைக்கு வா" என்று இடமும் நாளும் குறித்து அழைத்தார். காளைப் பருவம் உடைய அவன் முதியவன் என்றும் பாராது போர் நிகழ்ச்சிக்குக் கருத்துத் தெரிவித்தான்.

ஊரவர் திரண்டனர்; வாளை ஏந்தி முதியவரும் சித்தனும் சுழற்றி ஒருவரை ஒருவர் தாக்க முற்பட்டனர். முதியவர் தானே என்று அவன் அவரை எளிமையாகக் கருதினான். இருபது நாழிகை வாளைச் சுழற்றியும் அடி பெயர்த்தும் கலைத் திறனைக் காட்டினர். சூடு பிறந்தது. அங்குள்ளவர் அனைவரும் கேட்குமாறு முதியவராகிய சிவபெருமான், 'உன் குருவின் பத்தினியை நினைத்த நெஞ்சு எது? பார்த்த கண்கள் எவை? தொட்ட கை எது? கூசாமல் பேசிய நா எது? என்று கேட்டு அவற்றைத் தனித் தனியே வடுப்படுத்தி அவன் தலையை உடம்பிலிருந்து வேறுபடுத்தினார். தலை உருண்டிட அவன் பிணமானான். அவர் தலைமறைவு ஆகிவிட்டார்.

மாணவர்கள் ஆசிரியரைத் தேடினார்கள்; களத்தில் இல்லை; இல்லத்தில் இருப்பார் என்று அங்குச் சென்று தேடினார்கள். உண்மையான அம்முதியவர் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டுவிட்டு மெதுவாக வீடு நோக்கி நடந்தார், மாணவர்கள் அவர் மனைவியிடம் சித்தனை வெட்டி வீழ்த்திய சித்திரத்தைப் பற்றிப் பேசிக்-