பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்க் காட்டிட்ட படலம்

95


அரச செல்வம் அத்துணையும் அவன் கைக்கு வந்ததும் அவன் தங்கு தடையின்றி எடுத்துச் செலவழிக்க முற்பட்டான்; தனக்கோ தன் குடும்பத்துக்கோ அல்ல; அடியவர் திருக்கூட்டத்திற்கும் கோயில் திருப்பணிகளுக்கும் மண்டபங்கள் கட்டுவதற்கும் அஞ்சுவதில்லை. ஆயிரக்கணக்கில் கோயில் திறப்பதற்கும் பூசாரிகள் வளமாக வாழ்வதற்கும் அறக்கட்டளைகள் ஆயிரக்கணக்கில் தோற்றுவித்தும் வேத பாடசாலைகள், சைவ திருச்சபைகள், தேவாரப் பண்ணிசைக்கும் இசைக்கூடங்கள், சாத்திர ஆராய்ச்சிகள் தெய்வீகச் சபைகள் இப்படி அளவற்றன அமைத்தும், அவற்றிற்கு வேண்டிய நிதிகளை வாரி வழங்கினான்.

படைகள் திரட்டுவதற்கும், தளங்கள் அமைப்பதற்கும், குதிரைகள் கட்டுவதற்குத் தொட்டில்களோ படைக்கலக் கூடங்களோ கட்டவும் செலவிடப்படவில்லை. போரின் அறிகுறியே கண்ணுக்குப் படாமல் நிதிகள் மட்டும் நதிகள் போலப் பாய்ந்து ஓடுவதைக் கண்டு அரசன் ஐயம் கொண்டான்.

படைத்தலைவன் நெருங்கிய நண்பன், நம்பிக்கைக்கு உகந்தவனாகவும் இருந்ததால் கேட்பது எப்படி என்று விட்டு வைத்தான். படை திரட்டுவதன் அறிகுறியே தென்படவில்லையே என்று வெளிப்படையாகக் கேட்டான்; உள்ளுர்ப் படைகள் உளுத்துப் போனவை; வெளுத்துக் கட்ட வெளியூர்ப் படைகள் மேலானவை என்று தெரிந்து ஒருபெரிய பொய்யைச் சொல்லித் தப்பித்துக் கொண்டான்; அரசனும் அவன் கூர்த்த அறிவு கண்டு ஆழ்ந்த மகிழ்ச்சி அடைந்தான்.

அரசனிடம் சொன்ன பொய்கள் ஆயிரம்; அதை மெய்ப்பிக்க வழி என்ன? சோமசுந்தரக் கடவுளிடம் சென்று முறையிட்டான். "இறைவா செய்தது தவறோ