பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

95


இது, இன்னதன்மைத்தென உரையால் உணர்த்த வொண்ணாத் தன்மையது சிவபோகம் என்கின்றது.

(இ-ள்) குருவுணர்த்த ஆன்மா சிவத்தோடு ஒன்றியநிலை, பெறுவானும் பேறும் ஆகிய நுகர்ச்சியுணர்வினால் ஒன்றுமன்று என்றும் மீளப் பிரிதலின்மையால் இரண்டுமன்று; சிவம் என்று தனித்ததொரு முதல் வேறு தோன்றாமையால் உள்ளதுமன்று; ஆன்மா சிவப் பற்றினை நுகரும் நுகர்ச்சியுண்மையால் இல்லதும் அன்று; உலகியலில் நன்றென்றும் தீதென்றும் பகுத்தறியும் உயிரறிவுக்கு அப்பாற்பட்டமையால் நன்றும் அன்று தீதும் அன்று; தன்மை முன்னிலை படர்க்கையெனச் சுட்டியுணரப்படும் இடத்திற்கும் சுட்டுணர்விற்கும் அப்பாற் பட்டுள்ளமையால் நானன்று நின்ற நிலையன்று நீயன்று நின்னறிவும் அன்று; உலகின் தோற்ற வொடுக்கமாகிய காரண காரிய நிலைகட்கு அப்பாற்பட்டமையால் தலை (முடிவு) அன்று; அடி (முதல்) அன்று எ-று. -

இத்தகைய சிவாதுபவத்தைப் பெறுவது எவ்வாறு என வினவிய மாணாக்கனை நோக்கி அறிவுறுத்துவதாக அமைந்தது, பின்வரும் திருக் களிற்றுப்படியாராகும்.


59. செய்யாச் செயலையவன் செய்யாமை கண்டுதனைச்1
செய்யாச் செயலிற் செலுத்தினால்-எய்யாதே
மாணவக அப்பொழுதே வாஞ்சைக் கொடிவளர்க்கும்
ஆணவமும் அற்றா லறி.2

(இ-ள்) யாராலும் செய்யவொண்ணாத ஐந்தொழில்களை அம் முதல்வன் கரணத்தாற் செய்யாமல் நினைவளவானே செய்தல்கண்டு ஆன்மாவாகிய தன்னுடைய செயலை அம்முதல்வனது நினைவாகிய திருவருளின் வழியடங்கி நிகழும்படி செலுத்தினால், அப்பொழுதே ஆசையை வளர்க்கும் ஆணவ மலமும் நின்னை வருத்தாது தேய்ந்தொழியும். எல்லாக் கேட்டிற்கும் காரணமாகிய அம்மலந்தேய்ந்தால் மாணவனே பாசப்பிணிப்பால் வரும் இளைப்பின்றிச் சிவாநுபவத்தை யறிந்து நுகர்வாயாக எ-று.

செய்யாச் செயல் என்றது, இறைவனொருவனாலன்றி ஏனையுயிர்த் தொகுதிகளாற் செய்தற்கியலாத ஐந்தொழில். செய்யாமை கண்டு என்றது, இறைவன் கரணத்தாலன்றி நினைவளவால் ஆக்காதேயாக்கி


1. செய்யாமற் செய்ததனை (பா. வே.)

2. ஆணவமிதுத்தாலறி " "