பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முறையில் இலக்கணம் முத்துக் குமாரத் தம்பிரான் சுவாமிகள் அவர்களிடமிருந்த பழைய உரைக்குறிப்பொன்று சிதம்பரம் சைவப் பேரன்பர் வைத்தியலிங்கஞ் செட்டியாரவர்களால் வெளியிடப் பெற்றுள்ளது. இவ்விரு நூல்களின் பொருளை விரித்து விளக்கும் முறையில் சிவநெறிச் செல்வர் காஞ்சிபுரம் ஆலால சுந்தரம் பிள்ளையவர்கள் எழுதிய விரிவுரையும் உண்டு.

திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் என்னும் இம்மெய்ந் நூல்களுக்கு நூலாசிரியர் கருத்தின்வழி உரைகாணும் திறத்தில் இந்நூல்களையருளிய உய்யவந்த தேவநாயனுர் இருவராலும் மதித்துப் போற்றப் பெற்ற தெய்வப் புலமைத் திருவள்ளுவர் அருளிய திருக்குறளும் ஆளுடைய பிள்ளையார் முதல் அருண்மொழித் தேவராகிய சேக்கிழார் பெருமான் வரையுள்ள அருளாசிரியர்கள் திருவாய் மலர்ந்தருளிய பன்னிரு திருமுறைகளும் முன்னூற் சான்றுகளாக நமக்குக் கிடைத்துள்ளமை நம் தமிழ்முன்னேர் செய்த நற்றவத்தின் பயனாகும். திருமுறையாசிரியர்கள் திருவடிகளை நெஞ்சத்திருத்திக் குருவருளின் துணைகொண்டு எழுதப் பெற்றது. திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்க்கு அமைந்த இவ்வுரை விளக்கமாகும்.


நன்றியுரை


இத் திருப்பணியில் அடியேனை ஈடுபடுத்திப் பணி கொண்டருளிய ஸ்ரீ ல ஸ்ரீ காசிவாசி முத்துக்குமார சுவாமித் தம்பிரான் சுவாமிகள் அவர்களின் பொன்னார் திருவடிகளை என் மனமொழி மெய்களால் வணங்கிப் போற்றுகின்றேன். இத்தகைய தமிழ்ப் பணிகளைச் செய்தற்குத் தோன்றாத் துணையாய்த் தண்டமிழ்ப் புலவர்க்கோர் அம்மானாய் மதிமலி புரிசை மாடக் கூடற் பதிமிசை நிலவு திருவாலவாய்த் திருக்கோயிலில் அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்தருளும் ஆலவாயண்ணல் திருவடிகளையிறைஞ்சிப் போற்றுகின்றேன்.

முதல் நூலாகிய திருவுந்தியாரை மூலமாகவும் அதற்கு வழி நூலாகிய திருக்களிற்றுப்படியாரை அதன் உரையாகவும் கொண்டு ஒப்பியல் நோக்குடன் எழுதப் பெற்ற இவ்வுரைவிளக்கம் செந்திலாண்டவன் திருவருளைப் பெற்றுச் செந்தமிழும் சிவநெறியும் வளர்த்த பெருந்தவமுனிவர் குமரகுருபர சுவாமிகள் திருமரபில் திருப்பனந்தாளில் நிலைபெற்றுள்ள ஸ்ரீ காசிமடத்தின் வெளியீடாக வெளிவருவது மிகவும் சிறப்புடையதாகும்.


vii