பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



திருக்குறள் முதலிய செந்தமிழ்நூல்களையும், சிறப்பாகச் சைவத் திருமுறைகளையும் அவற்றின் பயனாகிய மெய்கண்ட நூல்களையும் சிறந்த முறையில் வெளியிட்டு வருமாறே இவ்வுரை விளக்க நூலையும் வெளியிட்டருளிச் செந்தமிழும் சிவநெறியும் வளர்த்துவரும் திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்தின் அதிபர் ஸ்ரீ ல ஸ்ரீ காசிவாசி சுவாமிகள் அவர்களின் பொன்னார் திருவடிகளுக்கு என்றும் நன்றி செலுத்தும் கடப்பாடுடையேன்.

கண்ணும் கருத்துமாயிருந்து இந்நூல் வனப்புற வெளிவருதற்கு உறுதுணை புரிந்த என் கெழுதகை நண்பரும் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரிப் பேராசிரியரும் ஆகிய திரு. தா. ம. வெள்ளைவாரணம் அவர்கட்கு எனது உளமார்ந்த நன்றி உரியதாகும்.


“ஞாலம் நின்புகழே மிகவேண்டும்தென்
ஆல வாயி லுறையுமெம் ஆதியே’’


க. வெள்ளைவாரணன்,
இணைப்பாளர்,
தமிழியற்புலம்,
மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம்.
மதுரை
26-2-82