பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


“தலையே நீவணங்காய்” (திரு அங்கமாலை)

எனவும்,

"வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சுந்
தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா வினையே னெடுங்காலமே'’ (5-90-7)

எனவும்,

“வணங்கத் தலைவைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத்
திணங்கத்தன் சீரடியார் கூட்டமும் வைத்தெம்பெருமான்
அணங்கொ டணிதில்லை யம்பலத்தே யாடுகின்ற
குணங்கூரப் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ’’

(திருவாசகம்-திருப்பூவல்லி-7

}

எனவும் வரும் திருப்பாடல்களாகும். இத்திருவுந்தியாரின் விளக்கமாக அமைந்தது பின்வரும் திருக்களிற்றுப்படியார் திருப்பாடலாகும்.


84. சிவமே சிவமாக யானினைந்தாற் போலச்
சிவமாகி யேயிருத்த லன்றிச் - சிவமென்
றுணர்வாரு மங்கே யுணர்வழியச் சென்று
புணர்வாரு முண்டோ புவி

இது, திருவருளையுணர்ந்தோர் அத்திருவருளின் துணைகொண்டு தற்போதம் தோன்றாவண்ணம் சிவமாந்தன்மை பெற்றுய்யும் முறை இதுவென மாணவர்க்கு அறிவுறுத்துகின்றது.

(இ-ள்) பேதம், அபேதம், பேதாபேதம், என்னும் இவை நீங்கிய பக்குவநிலையிலே விளங்கித் தோன்றும் சிவனது இயல்பே உயிரை அகத்திட்டுக் கொண்டு தன்னியல்பே மேற்பட்டுத் திகழ வேறொரு விகற்பமுங் கூடாமல் யான் நுகர்ந்த வண்ணமே மாணாவனாகிய உன்னையும் நிறுத்த நினைந்தாற்போல, நீயும் ஒரு விகற்பமுங் கூடாமல் சிவமாக அதன் அருள்வழி யிருத்தலல்லது ஆன்மாவாகிய தானும் ஒரு முதலென்றும் சிவனும் தனித்ததொரு முதலென்றும் கொண்டு தன்னுடைய உயிரறிவினால் இந்தச் சிவனை உள்ளவாறு உணரவல்லவர்களும் அவ்வாறு உணர்ந்த உணர்வினைத் துணை கொண்டு தானே அம்மெய்ப்பொருளைக் கூடவல்லவர்களும் இவ் வுலகில் யாரேனும் உள்ளனரோ? (ஒரு வரும் இல்லை) எ-று.

இனி, “பாசங்களாற் பிணிப்புற்றிருக்கும் கட்டு நிலையிலே உயிருணர்வு ஒன்றுமே தோன்றினாற் போலப் பாசப்பிணிப்பு நீங்கிய