பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


அபேதவாதி கூற்றாகவும், அது நீயேயாகின்றாய் அது ஆனேன்’’ என்பதனைப் பேதாபேதவாதி கூற்றாகவும், இவ்வுரையாசிரியர் கொண் டுள்ளார் என்பது இவ்வுரையமைப்பினால் இனிது புலகுைம். இங்ஙனம் பேதம் அபேதம் பேதாபேதம் என்னும் முத்திறக் கொள்கையாளர்களையும் மறுத்துரைத்தலால், ஆன்மாவும் சிவமும் இருளும் வெளியும் போல் வேறாதலும், பொன்னும் அதனலாய அணிகலனும் போல் ஒன்றாதலும், சொல்லும் பொருளும் போல் ஒன்றெனவும் இரண்டெனவும் இருதிறமும் ஒருங்குடையதாதலும் இன்றி, உடம்பும் உயிரும் போல் கலப்பினால் ஒன்றாதலும், கண்ணும் கதிரவனும் போல் பொருட்டன்மையால் வேறாதலும், கண்ணொளியும் உயிரறிவும் போல் உயிர்க்குயிராதற் றன்மையால் உடனாதலும் ஆகிய அத்துவித சம்பந்தமுடைய இரு பொருள்கள் எனக் கொள்ளுதலே ஏற்புடைய தென்றவாறாம்.

மேற்குறித்த திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் பாடல்களை அடியொற்றியமைந்தது,

அதுவிது வென்ற ததுவல்லான் கண்டார்க்
கதுவிது வென்றதையும் அல்லான்- பொதுவதனில்
அத்துவித மாதல் அகண்டமுந் தைவமே
அத்துவிதி யன்பிற் றொழு. (78).

எனவரும் சிவஞானபோத உதாரண வெண்பாவாகும்.

“முதல்வன் உயிர்ப்பொருள் உயிரில்பொருள் எல்லாவற்றினும் நிற்கும் நிலைமை அறியப் பெற்றார்க்குப் பரம்பொருளாகிய அதுவும் ஆன்மாவாகிய இதுவும் எனப் பிரித்துக் கூறிப்படும் பேத நிலைமையனும் அல்லனாய், எல்லாம் பரம்பொருளாகிய அதுவே யெனக் கூறப்படும் அபேத நிலைமையனும் அல்லனாய், சொல்லும் பொருளும் போல அதுவேயிது எனக் கூறப்படும் பேதாபேத நிலைமையனும் அல்லனாய், அம்மூன்றற்கும் பொதுமையாக உயிரறிவும் கண்ணொளியும் போன்று இரண்டறக் கலந்த அத்துவித சம்பந்தம் உடையனாதலால் உலகெலாமாகி விரிந்துள்ள எல்லாப் பொருள்களும் அவன் வடிவேயாயினும் அவற்றுள்ளும் அன்பு விளையுமிடங்களாகிய குருலிங்க சங்கமத் திருமேனிகளைச் சிவனெனவே தெளிந்து வழிபடுவாயாக” என்பது இதன் பொருளாகும்.

இச்சிவஞானபோத உதாரணவெண்பாவை அடியொற்றி யமைந்ததே மேற்குறித்த தில்லைச் சிற்றம்பலவர் உரையாகும்.

இனி ‘இரண்டாக ஒன்றாக’ என்பதனை, நிரனிறையாகக் கொண்டு “அதுவிது” என்றும் “அவன் நானே” யென்றும் இரண்டாகவும்