பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

145


இம்மூன்றின் வேறாய் மூன்றையும் உள்ளடக்கிய அத்துவித நிலையினையும் உணர்த்திநின்றன. உலகுயிர்த் தொகுதியுடன் இறைவனுக்குள்ள தொடர்பு பேதம் அபேதம் பேதா பேதம் என்னும் மூன்றிற்கும் அப்பாற்பட்டதாய், “ஒன்றாகாமல் இரண்டாகாமல் ஒன்றுமிரண்டும் இன்றாகாமல்” இரண்டறக் கலந்து நிற்பதாகிய அத்துவித சம்பந்தம் எனப்படும் என்னும் இவ்வுண்மையினை ஐயந்திரிபின்றித் தெளிவுபடுத்தும் நிலையில் அமைந்தது,

ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய்
மாறாமறை நான்காய் வரு பூதம்மவை யைந்தாய்
ஆறார் சுவை யேழோசையோ டெட்டுத் திசை தானாய்
வேறாயுட னானானிடம் விழிம்மிழ லையே (1-11-2)

எனவரும் திருஞானசம்பந்தர் தேவாரமாகும். இத்திருப்பாடற் பொருளை யுளங்கொண்டு சைவசித்தாந்தங் கூறும் உயிர்நிலைக் கொள்கையாகிய சுத்தாத்துவித உண்மையினை விரித்து விளக்கும் முறையில் மேற்குறித்த திருக்களிற்றுப்படியார் அமைந்துள்ளமை, சைவத் திருமுறைகள் பன்னிரண்டின் பிழிவாகத் திகழ்வன திருவுந்தியார் முதலாகவுள்ள சைவசித்தாந்த மெய்ந்நூல்கள் பதினான்கும் என்னும் மெய்ம்மையினை நன்கு வலியுறுத்துதல் காண்க. -

நிலம் நீர் நெருப்பு வளி விசும்பு ஞாயிறு திங்கள் ஆன்மா ஆகிய எண்வகைப் பொருள்களையும் தனக்குரிய திருமேனியாகக் கொண்டு எண்பேருருவினனாக இறைவன் விளங்குகின்றான் என்ருல், உடலைப்பற்றி யுளவாம் துன்பங்கள் அதனகத்து வாழும் உயிர்களைப் பற்றுமாறு போல உயிர்கள் உறும் துன்பங்கள் யாவும் உயிர்க்குயிராகிய இறைவனைப் பற்றுவன அல்லவோ என வினவிய மாணாக்கனை நோக்கிக் கூறுவதாக அமைந்தது, அடுத்துவரும் திருக்களிற்றுப்படியாராகும்.


அஎ. உன்னுதரத் தேகிடந்த கீடம் உறுவதெல்லாம்
உன்னுடைய தென்னாய்நீ யுற்றனையோ-மன்னுயிர்கள்
அவ்வகையே காணிங் கழிவதுவும் ஆவதுவும்
செவ்வகையே நின்றசிவன் பால்.

இஃது உயிர்களைப் பற்றி வருத்தும் வினைத்துன்பங்கள் உயிர்க்கு உயிராகிய முதல்வனைப் பற்ற வல்லன அல்ல என்கின்றது.

(இ-ள்) மாணாக்கனே உன்னுடைய வயிற்றிலே பலவகையாய்க் கிடந்துழலுகின்ற புழுமுதலிய சிற்றுயிர்கள் அடைகின்ற சுகதுக்க வாதனைகள் எல்லாவற்றையும் உனக்குள்ள வினைபோலக் கூடி நுகர்ந்தனையோ? நுகர்ந்தாயல்லை. நுகராத இந்நிலையில் அவற்றை


19